Sleep Apnea
Sleep Apnea

Sleep Apnea நோயால் துபாயில் 20 சதவிகிதம் பேர் பாதிப்பு!

Published on

துபாயில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் அங்கு வசிக்கும் 21 சதவீதம் பேர், குறிப்பாக 51 வயது முதல் 60 வயதுடையவர்கள் ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஸ்லீப் அப்னியா என்றால், தூங்கும்போது நம் தசைகள் ரிலாக்ஸ் அடைவதன் காரணமாக மூச்சு குறைவது அல்லது காற்றோட்டம் தடைபடுவது ஆகிய பிரச்சனைகள் ஏற்படுவதுதான். தொண்டையின் பின் பகுதியில் உள்ள மெல்லிய திசுக்கள் பின்னிக் கொண்டு, மேல்நோக்கிச் செல்லும் மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.

தூங்கிக்கொண்டிருக்கும்போது 10 நொடிகள் இதுபோல ஏற்படும்.  பெரும்பாலும் 10-30 நொடிகளில் மூச்சு திரும்பிவிடும் என்றாலும், சிலருக்கு ஒரு நிமிடம் அல்லது அதற்கு கூடுதலாக இந்தப் பிரச்சினை நீடிக்கிறது. இதனால், ரத்தத்தில் சுமார் 40 சதவிகித அளவு ஆக்ஸிஜன் விநியோகம் தடைபடுகிறது.

ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது என்பதை நம் மூளை நமக்கு எச்சரிக்கை செய்யும். அப்போது திடீரென்று தூக்கி வாரிப்போட்டு எழுவோம்.

இதன் அறிகுறிகள்:

மிக அதிக இரைச்சலுடன் குறட்டை விடுவது, விட்டுவிட்டு சுவாசிப்பது, தூக்கம் தடைபடுவது, காலையில் வாய் வறட்சி ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவது, காலையில் தலைவலி, பகல் நேரத்தில் மிகுதியான சோர்வு மற்றும் தூக்கம், மன அழுத்தம், கவனச்சிதறல் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.

இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு நோய் தங்களுக்கு இருப்பதே அவர்களுக்கு தெரியாது.

அந்தவகையில் துபாயில் சுகாதாரத்துறை எடுத்த கணக்கெடுப்பில், 21 சதவிகிதம் பேர் ஸ்லீப் அப்னியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 51 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் அதிகமாகவே பாதிக்கப்படுகின்றனர். குறட்டைச் சத்தம் தாங்க முடியாமல் தங்கள் துணைகளை அழைத்து வருவோர் அங்கு அதிகரித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
உள்ளங்கைகள் கரடு முரடாக மாறிப்போவது ஏன்? காரணங்களும் தீர்வுகளும்!
Sleep Apnea

அவர்களுக்கு சிகிச்சை எடுத்துப் பார்க்கும்போது உயர் ரத்த அழுத்தம், மன இறுக்கம், ஸ்லீப் அப்னியா ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக இந்த நோய், உடல் எடை கொண்டவர்கள், வயதானவர்கள், குறுகிய மூச்சுக்குழாய் கொண்டவர்கள், ஹைப்பர்டென்சன், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com