கெட்டுப்போன உணவைக் கண்டறியும் சிறிய, மலிவான சென்சார்: இந்திய விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு!

கெட்டுப்போன உணவைக் கண்டறியும் சிறிய, மலிவான சென்சார்: இந்திய விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு!

அமெரிக்காவில் உள்ள இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், உணவு கெட்டுப்போவதை உடனடியாகக் கண்டறியக்கூடிய சிறிய மற்றும் குறைந்த விலைகொண்ட pH சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

pH அளவை அளவிட அல்லது உணவு எவ்வளவு அமிலத் தன்மை கொண்டது என்பதை அளக்க தொழிற்சாலைகள் பொதுவாக அதிக பருமனான மீட்டர்களைப் பயன்படுத்துகின்றன. தோராயமாக ஒரு அங்குலம் நீளம் ஐந்து அங்குலம் உயரம், எனவே உணவின் புத்துணர்ச்சியைக் கண்காணிக்க ஒவ்வொரு பொட்டலத்திலும் அவற்றைச் சேர்ப்பது பொருத்தமானதல்ல.

"நாங்கள் உருவாக்கிய pH சென்சார்கள் ஒரு சிறிய வயர்லெஸ் ரேடியோ-அதிர்வெண் அடையாள சாதனம் போல வேலை செய்கின்றன -- விமான நிலையங்களில் சோதனை செய்த பிறகு உங்கள் லக்கேஜ் டேக்கில் உள்ளதைப் போன்றது" என்று டெக்சாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் சாதனத்தை உருவாக்கிய யு.எஸ் PhD மாணவர் ஹெங்டாவ்லியூ சாவங் (Khengdauliu Chawang) கூறினார்.

பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் படி "ஒவ்வொரு முறையும் எங்கள் சாதனத்துடன் கூடிய உணவுப் பொட்டலம், கப்பல் தளவாட மையங்கள், துறைமுக வாயில்கள் அல்லது பல்பொருள் அங்காடிகளின் நுழைவாயில்கள் போன்ற சோதனைச் சாவடியைக் கடக்கும் போது, அவை ஸ்கேன் செய்யப்பட்டு, அவற்றின் pH அளவைக் கண்காணிக்கும் சர்வருக்குத் தரவு அனுப்பப்படும்" என்று சாவாங் கூறினார். .

நாம் அதிக அளவில் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது ஒவ்வொரு முறையும் முழு பயணத்திலும் -- பண்ணைகள் முதல் நுகர்வோர் வீடுகள் வரை புத்துணர்ச்சி வரம்புகளைத் துல்லியமாகக் கண்டறியும் இத்தகைய உள்ளமைவு, தொடர்ச்சியான pH கண்காணிப்பை அனுமதிக்கும் என்று சாவங் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் சுமார் 1.3 பில்லியன் மெட்ரிக் டன் உணவு ஒவ்வொரு ஆண்டும் வீணாகிறது.

இந்த சாதனத்தை உருவாக்குவது சாவாங்கின் தனிப்பட்ட விஷயமும் கூட என்கிறார் சாவங் ஏனெனில், அவர் முதலில் நாகாலாந்தைச் சேர்ந்தவர், அங்கு மக்கள் விவசாய பயிர்களை பெரிதும் நம்பியுள்ளனர். "நாகாலாந்தில் உணவுக் கழிவுகள் என்பது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட கூடுதல் களப்பணி" என்று சாவாங் கூறினார்.

"உணவு வீணாவதைத் தடுக்க வேண்டியதின் அவசியம், என்னை விலை குறைவான மலிவான சென்சார் கொண்ட உணவு கெட்டுப் போதலைக் கண்டறியக்கூடிய ஒரு சாதனத்தைப் பற்றி சிந்திக்க என்னைத் தூண்டியது" என்று சாவங் விளக்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com