ஸ்மார்ட் ஃபோன்களை இனி 5 வருடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.. மத்திய அரசு வைத்த செக்!

Smart phones can only be used for 5 years.
Smart phones can only be used for 5 years.

இனி ஒரு ஸ்மார்ட்போனை 5 வருடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விதியை இந்திய அரசாங்கம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோனின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களை வித்தியாசமாகப் பார்க்கும் மனநிலை மக்களிடம் வந்துவிட்டது. ஆனால் ஒருமுறை ஸ்மார்ட்போனை வாங்கி அதிக காலங்கள் பயன்படுத்தும்போது அதில் பழுது ஏற்பட்டு பேட்டரி வெடிக்கும் அபாயம் இருக்கிறது. அதன் காரணமாக ஒரு ஸ்மார்ட் போனை அதிகபட்சம் எவ்வளவு ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்பதற்கான வரையறையை இந்திய அரசு கொண்டு வர உள்ளதாகத் தெரிகிறது. 

அதாவது ஒரு ஸ்மார்ட்போனின் அதிகபட்ச ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்கும் புதிய விதியை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அதன்படி நீங்கள் எவ்வளவு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் சாதனம் வைத்திருந்தாலும், அதை கட்டாயமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி விட வேண்டும். அதேபோல பயன்படுத்திய சாதனத்தை ரீசைக்கிள் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து அதற்கு ஏற்ற தொகையை பெற்றுக் கொள்ளலாம். 

இது முழுக்க முழுக்க பொது மக்களின் பாதுகாப்புக்காகவே அரசு எடுக்கிறது. ஏனெனில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதிக அளவில் கதிர்வீச்சை வெளியிடுமாம். இதனால் மனிதர்களின் உறக்கம், இதயம், மூளை போன்றவை பாதிக்கப்படுவதால், ஒரு ஸ்மார்ட் போனை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் பயன்படுத்துவது உடலை சீர்குலைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
யூட்யூபில் புதிய சாதனை படைத்துள்ள "ஓபன் கங்னம் ஸ்டைல்" பாடல்: 11 ஆண்டு கால வரலாறு!
Smart phones can only be used for 5 years.

எனவே ஸ்மார்ட்போனை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயமாக மாற்றும் விதியை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது. மேலும் இனி தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்து உழைக்கும் படி உருவாக்குவது பற்றி பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இது மூலமாக இனி ஒரு நபர் ஒரு ஸ்மார்ட்போனை ஐந்து ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com