உணவு விஷயத்தில் நோ காம்ப்ரமைஸ்..! மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு..!

மாணவர் விடுதி
மாணவர் விடுதிSource:vikatan
Updated on

சமூக நீதித்துறையின் கீழ் உள்ள மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளை மூன்று வேளையும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் தினமும் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவுகள் தரமானதாக இல்லை என புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நீதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சமூக நீதித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய, சமூக நீதித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை புகைப்படங்கள் எடுத்து தினமும் வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எடுக்கப்படும் புகைப்படங்களை அந்தந்த விடுதி காப்பாளர்கள் (wardens) உடனடியாக துறை சார்ந்த பிரத்தியேக whatsapp குழுவில் பதிவேற்ற வேண்டும்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கு தரமாற்ற உணவு வழங்கப்பட்டாலோ அல்லது இது குறித்து புகார்கள் வந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நீதித்துறை எச்சரித்துள்ளது.

சமூக நீதித்துறை விடுதி
சமூக நீதித்துறை விடுதிsource:dinamalar

சேலம், கோவை (ஒண்டிப்புதூர்) போன்ற இடங்களில் சமூக நீதி விடுதிகளில் தரமற்ற உணவு மற்றும் புழுக்கள் இருந்ததாக மாணவர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள், விடுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். உணவு விஷயத்தில் சமரசம் செய்யப்படாது என்றும், தரமான உணவு உறுதி செய்யப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்ததை அடுத்து, உணவு விநியோகத்தை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் இதுபோன்று 'உணவு வெளிப்படைத் தன்மை'(Food Transparency) திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, சமூக வலைதளங்கள் மூலம் உணவுப் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் பதிவுகளில் காலை, மதிய மற்றும் இரவு உணவுகளின் படங்களுடன் நேரம் மற்றும் தேதி முத்திரைகள், உணவின் அளவு, சமையலறை நிலை மற்றும் உணவு தயாரிப்பு முறை போன்ற விவரங்களும் இடம்பெற செய்துள்ளனர். இந்த முன்னோடி திட்டம் கர்நாடக மாணவர் சமூகத்திற்கு தரமான உணவையும் வெளிப்படை தன்மையையும் உறுதி செய்து மாநிலம் தழுவிய செயலாக்கத்திற்கு ஒரு மாதிரியாக விளங்குகிறது. வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்கும் பொது மக்களை ஈடுபடுத்துவதற்கும் சமூக ஊடகங்கள் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக செயல்பட்டு வருகிறது.

சமூக நலத்துறை விடுதிகளில் உணவு தவறாமல் பரிமாறப்படாமல் இருப்பது அல்லது உணவின் தரம் மோசமாக இருப்பது போன்ற தொடர்ச்சியான புகார்களை சரி செய்யும் பொருட்டு உணவுத்துறையானது 2024 நவம்பரில் ராய்ச்சூர், பீதர், சாமராஜ நகர் போன்ற மாவட்டங்களில் முன்னோட்ட அடிப்படையில் உணவு வெளிப்படைத் தன்மை மற்றும் சமூகத் தணிக்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர் ஜனவரி 2025 இல் இது பெங்களூரு நகர்ப்புறம், உடுப்பி, மைசூர், கோலார், பாகல்கோடு, தும்கூரு போன்ற மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது. இந்த முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தத் திட்டம் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள உணவுத்துறையால் நடத்தப்படும் அனைத்து விடுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்:
Interview: அருள்நிதிக்கு ஏன் கருணாநிதி பெயர்? - அருள்வான் இயக்குனர் கணேஷ் விநாயகன் Open Talk!
மாணவர் விடுதி
இதையும் படியுங்கள்:
"லஞ்சம் கேட்கிறார்களா?" - புகார் அளிக்க தமிழக அரசின் வாட்ஸ்அப் எண் இதோ.!
மாணவர் விடுதி
logo
Kalki Online
kalkionline.com