Son tied Mother on Electric post.
Son tied Mother on Electric post.

காலிஃப்ளவர் பறிச்சது ஒரு குத்தமா?  மின்கம்பத்தில் கட்டப்பட்ட தாய்.. மகன் வெறிச்செயல்!

Published on

ஒடிசா மாநிலத்தில் பெற்ற தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து மகன் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஒடிசா கியாஜ்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், 70 வயதான சாரதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், சமீபத்தில் சாரதாவின் மூத்த மகனான கருணாவும் உயிரிழந்தார். இந்நிலையில் சாரதா அவரது இளைய மகனுடன் அதே கிராமத்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

அதே கிராமத்தில் இளைய மகனுக்கு சொந்தமாக விவசாய நிலமும் உள்ளது. அதில் அவர் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். தனது மகனின் தோட்டம் தானே என நேற்று சமையல் செய்வதற்காக அவரது தாய் சாரதா ஒரு காலிஃப்ளவரை பரித்துள்ளார். இதனால் தாயின் மீது கடும் கோபம் கொண்ட இளைய மகன், சாரதாவை கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும் தங்கள் வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் அவரை இறுக்கமாகக் கட்டி துன்புறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். அந்நேரத்தில் தனது மாமியாரை காப்பாற்ற முயன்ற மனைவியையும் தாக்கி, வேறு யாராவது தடுக்க வந்தால் அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
இந்திய நர்சிங் மாணவியை உயிரோடு புதைத்த சைக்கோ காதலன்!
Son tied Mother on Electric post.

இறுதியில் ஊர் மக்கள் ஒன்றிணைந்து, அந்த சைக்கோ மகனிடம் இருந்து சாரதாவையும், அவனது மனைவியையும் காப்பாற்றியுள்ளனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இப்படி பெற்ற தாய் என்றும் பாராமல், தோட்டத்தில் காலிஃப்ளவர் பறித்ததற்காக கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய செயல்களை பார்க்கும் போது இப்படி கூடவா மனிதர்கள் இருக்கிறார்கள்? என்ற எண்ணம்தான் தோன்றுகிறது. 

logo
Kalki Online
kalkionline.com