காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தலைவராக சோனியா தேர்வு!

Sonia Gandhi
Sonia Gandhi

க்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன் முறையாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியின் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக சோனியா காந்தியின் பெயரை, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து கௌரவ் கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே.சுதாகரன் ஆகியோர் அதற்கு ஆதரவு தர, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்பு மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி ஒரே மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வேணுகோபால், 'மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் ஒரேமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தக் கூட்டணியை மக்களவையில் வழிநடத்திச் செல்ல ராகுல் காந்தி சிறந்த தேர்வாக இருப்பார்' என்று அவர் கூறினார்.

அதையடுத்து, ‘ராகுல் காந்தி இந்த முடிவை ஏற்றுக்கொள்வாரா’ என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கே.சி.வேணுகோபால், 'ராகுல் காந்தி இது குறித்து விரைவில் முடிவெடுப்பார்' என்று கூறினார். தொடர்ந்து அவர், 'காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் காரிய கமிட்டியில் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமை தற்போது முற்றிலும் மாறிவிட்டது' என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்:
‘எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள்தான் தீர்மானிப்பார்கள்’: நவீன் பட்நாயக்!
Sonia Gandhi

இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளுதல், கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com