சோனியா காந்தியின் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்த சொத்து விவரம்.. எவ்வளவு தெரியுமா?

Sonia Gandhi
Sonia Gandhi
Published on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜ்யா சபா தேர்தலில் போட்டியிட ராஜஸ்தானில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சோனியா காந்தியின் சொத்து விவரம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை சோனியா காந்தி மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தகவல் வெளியானது. அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் போட்டியிடவில்லை என்று அவரே கூறினார். இதுவரை அவர் போட்டியிட்ட உத்திரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இம்முறை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சோனியா காந்தி ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட ராஜஸ்தானில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சோனியா காந்தி தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்திக்கு இத்தாலியில் உள்ள அவரது பூர்வீக சொத்தில் ஒரு பங்கு உள்ளது எனவும், அந்த சொத்தின் மதிப்பு ரூ 27 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த சொத்துகளிலிருந்து சோனியா காந்திக்கு வருமானம் வந்துக்கொண்டிருக்கிறது என்றும், இதற்காக ரிசர்வ் வங்கியிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தவிர ரூ12.53 கோடி சொத்து மதிப்பு உள்ளதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். இதனைப் பற்றி விரிவாக குறிப்பிட்டிருந்த சோனியா காந்தி, கடந்த ஐந்து வருடங்களில் சொத்து மதிப்பில் ரூ.72 லட்சம் வருமானம் மூலம் அதிகரித்துள்ளதாகவும், 1. 267 கிலோ தங்கம் மற்றும் 88 கிலோ வெள்ளி ஆகியவையும் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருக்கு டெல்லியில் ரூ 5.88 கோடி மதிப்பில் விவசாய நிலமும் உள்ளது.

அதுப்போக எம்.பி. சம்பளம், வங்கியில் இருக்கும் இருப்புத்தொகை, மியூச்சுவல் பண்ட் டிவிடண்ட், புத்தகங்களுக்கான ராயல்டி ஆகியவற்றின் மூலமும் வருமானம் வந்து கொண்டிருக்கின்றது என்று சோனியா காந்தி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு எந்த காரோ அல்லது வேறு எந்த விதமான வாகனமோ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
செல்பி மோகத்தால் நடந்த விபரீதம்.. கடித்து குதறிய சிங்கம்.. திருப்பதியில் நடந்தது என்ன?
Sonia Gandhi

கடந்த 2019ம் ஆண்டு சோனியா காந்தியின் மக்களவைத் தேர்தல் பிராமணப் பத்திரத்தில், இத்தாலியில் உள்ள பூர்வீக சொத்துப் பற்றி எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com