தேர்வு கிடையாது... மார்க் வைத்து வேலை..! ரயில்வேயில் 1785 காலியிடங்கள் அறிவிப்பு!

INDIAN RAILWAY
INDIAN RAILWAY
Published on

நிறுவனம் : தெற்கு ரயில்வே

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 1785

பணியிடம் : இந்தியா

ஆரம்ப நாள் : 18.11.2025

கடைசி நாள் : 17.12.2025

தென்கிழக்கு ரயில்வே துறையின் (South Eastern Railway – SER) ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (Recruitment Cell), தற்போது காலியாகவுள்ள 1785 Apprentices (அப்ரண்டீஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியின் பெயர்: Apprentices (அப்ரண்ட்டிஸ்)

காலியிடங்கள்: 1785

சம்பளம்: அப்ரண்ட்டிஸ் பணிக்கு தோராயமாக ரூ. 15,000/- சம்பளம்

கல்வி தகுதி: Matriculation (Matriculate or 10th class in 10+2 examination system) from a recognized Board with minimum 50% marks in aggregate (excluding additional subjects) and an ITI Pass certificate in concerned Trade granted by the NCVT/SCVT

கல்வி: 10 ஆம் வகுப்பு (Matriculation) தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட வர்த்தகப் பிரிவில் ஐ.டி.ஐ (ITI) தேர்ச்சிச் சான்றிதழை NCVT/SCVT ஆகியவற்றில் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) சிறப்புத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST, PWD, பெண்கள் – கட்டணம் இல்லை

  • All Others – Rs.100/-

இதையும் படியுங்கள்:
"அப்பா-அம்மா என்னை வளர்த்த மாதிரி, நான் என் பையனை வளர்க்க முடியல!" - மாதவன் ஓபன் டாக்!
INDIAN RAILWAY

தேர்வு செய்யும் முறை:

தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்ட்டிஸ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, பின்வரும் இரண்டு முக்கிய நிலைகளைக் கொண்டுள்ளது:

1. தகுதிப் பட்டியல் தயாரித்தல் (Merit List Preparation)

இந்தப் பணிக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் (Written Exam) அல்லது நேர்முகத் தேர்வும் (Interview) நடத்தப்படாது.

விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு (Matriculation) மற்றும் ஐ.டி.ஐ (ITI) தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் சராசரி சதவீதத்தின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும். உதாரணமாக: (10-ஆம் வகுப்பு மொத்த மதிப்பெண் சதவீதம் + ஐ.டி.ஐ மொத்த மதிப்பெண் சதவீதம்) / 2 என்ற அடிப்படையில் இறுதிச் சதவீதம் கணக்கிடப்படலாம்.இந்தப் பட்டியலில் அதிக மதிப்பெண்களைப் பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த நிலையான ஆவணச் சரிபார்ப்புக்குத் (Document Verification) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2. ஆவணச் சரிபார்ப்பு (Document Verification – DV)

தகுதிப் பட்டியலில் (Merit List) தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, ஆவணச் சரிபார்ப்பில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் உள்ள அனைத்துத் தகவல்களும், அவர்கள் நேரில் கொண்டுவரும் அசல் சான்றிதழ்களுடன் சரிபார்க்கப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

தென்கிழக்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 18.11.2025 முதல் 17.12.2025 தேதிக்குள் https://www.rrcser.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களுக்கு ஜாக்பாட்: ரூ.18,999க்கு இன்டர்நெட் இல்லாமலும் இயங்கும் 'கியோ' கம்ப்யூட்டர்..!
INDIAN RAILWAY

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com