லெபனானிலிருந்த தென்கொரியர்களை விமானம் மூலம் மீட்ட தென்கொரியா அரசு!

Lebanon
Lebanon
Published on

இஸ்ரேல் லெபனான் போர் உச்சக்கட்டத்தில் இருந்து வரும் நிலையில், லெபனானில் இருக்கும் தென்கொரியர்களை தென் கொரியா அரசு விமானம் மூலம் மீட்டுள்ளது.

இஸ்ரேல் காசா போர் தொடங்கி நாளை மறுநாளுடன் ஓர் ஆண்டாகவுள்ளது. ஆனால், இன்னும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பல உலக நாடுகளும் இஸ்ரேலிடம் போரை நிறுத்தும்படி கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினை முழுவதுமாக ஒழிக்கும்வரை போரை நிறுத்தமாட்டோம் என்று கூறிவிட்டது. மேலும் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. ஆகையால், ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

அதேபோல், இஸ்ரேலும் ஈரான் மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. லெபனான் மீது கடந்த மாதம் 23-ந் தேதி மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது.

தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் ஊடுருவி தரைவழி தாக்குதலையும் தொடங்கியது.

இதுவரை லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதேபோல், அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். ஆகையால், அங்குள்ள பிற நாட்டினருக்கு அந்தந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளன. இந்தியாக்கூட உதவி எண்களை அறிவித்தது. அந்தவகையில் தற்போது தென்கொரியா தங்கள் நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
Red Velvet கேக்கில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – கர்நாடக உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!
Lebanon

97 பேரை விமானம் மூலம் மீட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த குழுவில் தென் கொரியா நாட்டை சேர்ந்த பிரஜைகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தென் கொரியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் லெபனானில் பணிபுரிந்த தூதர்கள் மற்றும் தூதரக பணியாளர்கள் தவிர சுமார் 30 தென் கொரியர்கள் இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல், லெபனானில் பதற்றம் இருக்கும் இடங்களுக்கு ராணுவ விமானங்களை அனுப்பி வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். சுமார் 480 தென் கொரிய பிரஜைகள் இஸ்ரேலிலும், 110 பேர் ஈரானிலும் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com