சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி: பரபரப்பை கிளப்பிய பகிர் பின்னணி! இறுதியில் நடந்தது என்ன?

தவெக அமைச்சரவையில் பாமக எம்.எல்.ஏ இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கு சௌமியா அன்புமணி அளித்த அதிரடி பதில்.
Sowmiya anbumani
sowmiya anbumani
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

கடந்த இரு தினங்களாக சௌமியா அன்புமணிக்கு, தமிழக அரசின் அமைச்சரவையில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக,தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறாமல் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், திமுகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இந்த ஆட்சியின் அமைச்சரவையில் காங்கிரஸ், அகில இந்திய முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இருக்கின்றன. இந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன. அதே நேரம் இந்த கட்சிகளை விட பெருவாரியான ஆதரவு கொடுத்து, தவெகவைக் அதிக பெரும்பான்மையுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வைத்தது, வேலுமணி மற்றும் சிவி.சண்முகம் தலைமையிலான அதிமுக அதிருப்தி அணி.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மற்ற காலியான தொகுதிகளுக்கு நீதிமன்ற வழக்கின் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் இடைத்தேர்தலில் கடுமையான மும்முனைப் போட்டி இந்த தொகுதிகளில் நிலவுகிறது. எப்படியாவது தவெகவை தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில், திமுகவும் அதிமுகவும் கடுமையாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றன. இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் தான், தன்னால் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இந்த தேர்தல் தவெகவை வீழ்த்தி விட்டால், கூட்டணி கணக்குகளை மாற்றலாம், காங்கிரஸ் கட்சிக்கும் பாடம் புகட்டலாம் என்று திமுக காத்திருக்கிறது.

vijay anbumani
vijay anbumani sowmiyainstagram

தவெகவிற்கு இது ஆட்சியமைத்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல், மேலும் தனிப்பெரும்பான்மை பெறாத அந்த கட்சிக்கு சொந்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியம். இந்த தேர்தல் வெற்றி தான், ஆட்சியின் நம்பிக்கையை அதிகரித்து நிலைத்து நிற்க உதவும். அதே நேரத்தில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு தங்கள் தொகுதியில் பிரச்சாரத்தின் போதே கடும் எதிர்ப்பு காணப்பட்டது. சில இடங்களில் அவர்களை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.

தவெக அரசு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இதனால் பெரும்பான்மை சமூகங்களின் வாக்குகள் தவெக கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசை ஆதரித்தாலும் சமீப காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் , இப்போதே ஆதரவுக்காக பாமக பக்கம் தவெக சாய்ந்துள்ளதாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று சௌமியா அன்புமணியை சந்தித்த செய்தியாளர்கள் , "இடைத் தேர்தல் முடிந்ததும் உங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப் போவதாக தகவல்கள் வருகின்றதே" என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த சௌமியா அன்புமணி , இந்த வதந்திகளை எல்லாம் பத்திரிக்கையாளராகிய நீங்கள் நம்ப வேண்டாம்! யாரும் நம்ப வேண்டாம்! என்று முற்றுப்புள்ளி வைத்தார். இந்த வதந்தியை எதற்காக யார் பரப்பி இருப்பார்கள் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com