‘கணவர் பணத்தை செலவு செய்வதுதான் எனது பொழுதுபோக்கு’ துபாய் பெண்ணின் துணிச்சல் பேச்சு!

‘கணவர் பணத்தை செலவு செய்வதுதான் எனது பொழுதுபோக்கு’ துபாய் பெண்ணின் துணிச்சல் பேச்சு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

ஒரு சினிமா படத்தில் நடிகர் கவுண்டமணி, ‘பொய் சொல்லலாம், அதுக்காக ஏக்கர் கணக்குல பொய் சொல்லக் கூடாது’ என்பார். அதைப்போல, ‘செலவு செய்யலாம், அதுக்காக ஒரு நாளைக்கு லட்சக் கணக்குல செலவு செய்யக் கூடாது’ என்று சொல்லத் தோன்றுகிறது துபாயில் வசிக்கும் ஒரு பெண்ணின் ஆடம்பர செலவைப் பார்க்கும்போது.

ஆமாங்க, துபாயில் வசிக்கும் பெண் இந்தப் பெண்ணின் பெயர் சவுதி. இவர், ‘தனது கணவரோட பணத்தை செலவு செய்வது ஒன்றுதான் எனது பிரதான தினசரி பொழுதுபோக்கு’ என்று கூறி இருக்கிறார். எவ்வளவு செலவு என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? ஒரு லட்சம், இரண்டு லட்சம் இல்லைங்க, ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 73 லட்ச ரூபாயை செலவு செய்வாராம். சரி, அப்படி என்னதான் இவர் செலவு செய்வார் என்று கேட்டால், வெறுமனே ஷாப்பிங் செய்வதற்குத்தான் இத்தனை லட்ச ரூபாயாம். இத்தனைக்கும் இவர் ஒரு குடும்பத்தின் இல்லத்தரசி என்றால் நம்ம ஊர் இல்லத்தரசிகள் வாயைப் பிளப்பார்கள். இன்னும் சிலர் தங்களோட கணவரைத் திட்டித் தீர்ப்பார்கள்.

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண்ணின் கணவர் ஜமால், அந்தப் பெண் சவுதிக்கு இரண்டு கார்களையும் தனது அன்புப் பரிசாக வழங்கி இருக்கிறாராம். எந்த வேலையையும் செய்யாமல், தனது கணவரின் சம்பாத்தியப் பணத்தை, அதுவும் ஒரு நாளைக்கு 73 லட்ச ரூபாய் பணத்தை செலவு செய்வது ஒன்றே தனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு என்று கூறி இருக்கும் இந்த துபாய் பெண்ணின் துணிச்சல் பேச்சு உலக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com