குரு சிஷ்யன் காம்போ பார்க்க ஆர்வமா?
ஐபிஎல் 2023 16வது சீசன் பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில் இன்று குஜராத் அணியும், சென்னை அணியும் மோதுகிறது.
மார்ச் 31-ந் தேதி ஆரம்பமாகி, கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன. அதனடிப்படையில், குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றில் வலுவான இடத்தைப் பிடித்தாலும், மற்ற அணிகளில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்பதை கடைசி வரை கணிக்க முடியாத அளவுக்கு, கடைசி போட்டி வரை ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இறுதியாக குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத்-சென்னை அணிகளுக்கிடையே முதல் குவாலிஃபயர் போட்டி நடைபெற உள்ளது.
2வது போட்டி நாளை லக்னோ, மும்பை அணிகளுக்கிடையே நடக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும. தோற்கும் அணி, நாளை லக்னோ-மும்பை இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 2வது தகுதி சுற்றில் 26ம் தேதி மோதும். அதில் வெற்றிபெறும் அணி, 2வது குவாலிஃபயர் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில், ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

அந்த புகைப்படத்தில், குஜராத் கேப்டன் பாண்டியா வண்டியை ஓட்ட, அருகே சென்னை அணி கேப்டன் தல தோனி அமர்ந்திருக்க ரேஸில் இருவரும் இருப்பதுபோல் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. வண்டி எண் 07 vs 33 என்று உள்ளது. அதில் உள்ள நம்பர் 07 தல தோனியின் ஜெர்சி எண்ணாகும். 33 என்பது பாண்டியாவின் ஜெர்சி எண்ணாகும்.
இப்படத்தைப் பகிர்ந்து, குரு சிஷ்யன் காம்போவைக் காண நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? என சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.