சென்னை வந்த கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு!

சென்னை வந்த  கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சிக்காக சென்னை வந்த சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லியில் இருந்து பயணிகள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. பத்து அணிகள் பங்கேற்க உள்ள ஐபிஎல் போட்டியின் முதலாவது ஆட்டம் குஜராத்தில் நடைபெறுகிறது இதில் சென்னை குஜராத் அணிகள் மோதுகின்றன.

போட்டி தொடங்க இன்னும் 29 நாட்களே உள்ள நிலையில் பயிற்சியில் ஈடுபடுவதற்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை வர தொடங்கியுள்ளனர். போட்டிக்காக தயாராகும் வகையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 26 பேர் பல்வேறு விமானங்களில் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து தனியார் ஓட்டலுக்கு செல்லும் மகேந்திர சிங் தோனி வரும் நாட்களில் சென்னையில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெயர் பொறித்த டீ சர்ட் அணிந்தபடியும் இந்திய ஆர்மி அடையாளம் பொறித்த முக கவசம் அணிந்தபடியும் சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அங்கிருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்து ஆனந்த கூச்சலிட்டு உற்சாகமடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியை பூக்கள் தூவி மேல தாளத்துடன் சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தற்போது நடக்கும் ஐபிஎல் சீசனுக்கான சென்னை அணியின் கேம்ப் இன்று தொடங்க உள்ளது. தோனியை போல் ரஹானே, ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் சென்னை வந்தடைந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com