IPL 2023 பிளே ஆஃப் : குஜராத், சென்னை அணி இன்று மோதல்! இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் ஆடிய ஆட்டங்கள் எப்படி?

IPL 2023 பிளே ஆஃப் : குஜராத், சென்னை அணி இன்று மோதல்! இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் ஆடிய ஆட்டங்கள் எப்படி?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

ஐபிஎல் 2023 16வது சீசன் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக முடிவடைந்து, தற்போது பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டியில் இன்று குஜராத் அணியும், சென்னை அணியும் மோதுகிறது.

குஜராத் அணியைப் பொறுத்தவரை மிகவும் பலம் வாய்ந்த அணியாக விளங்கி வருகிறது. இதுவரை ஆடிய 14 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றிபெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதேபோல் சென்னை அணி 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றும், 1 போட்டி முடிவு இல்லாமலும், மொத்தம் 17 புள்ளிகளுடன் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை அணியும் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டாலும், மறுபுறம் இந்த போட்டியின் முடிவு எப்படி அமையுமோ என்ற பதட்டமும் அவ்வப்போது தொற்றி வருகிறது.

இதுவரையிலும் சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேருக்குநேர் 3 முறை மோதியுள்ளன. இதில் கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல்-லில் 2 போட்டிகளிலும், இந்த ஐபிஎல்-லில் 1 போட்டியிலும் மோதியுள்ளன.

இந்நிலையில் இந்த 3 போட்டிகளிலுமே குஜராத் அணிதான் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், கடந்த சீசனில் குஜராத் அணிதான் கோப்பையை வென்றது. இருந்தாலும், தோனி தலைமையில் சென்னை அணி, இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அதேபோல், இந்த சீசனில் சென்னை அணியின் வீரர்கள் டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மூவருமே இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகின்றனர். அதேபோல், ரஹானே, ஜடேஜா, தீபக் சாஹர் மூவரும் குஜராத் அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல் கடைசி 2, 3 ஓவர்களில் தோனியும், தனது பங்குக்கு ஸ்கோரை உயர்த்துவதில் ஒவ்வொரு போட்டியிலும் முனைப்பு காட்டி வருகிறார்.

ஒருவேளை இன்றைய போட்டியில், சென்னை அணி தோற்கும் பட்சத்தில், நாளை லக்னோ, மும்பை அணிகள் மோதும் போட்டியில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்களோடு 26ம் தேதி நடக்கும் போட்டியில் மோத வேண்டியிருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com