'புஷ்பா' போல் தன்னை மாற்றிய பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்! யார் தெரியுமா?

'புஷ்பா' போல் தன்னை மாற்றிய பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்! யார் தெரியுமா?

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், கடந்தாண்டு, 'புஷ்பா' திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், 'புஷ்பா' திரைப்படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அல்லு அர்ஜூன் நகை, புடைவை அணிந்து மாஸ் கெட்டப்பில் வெளியான அப்படத்தின் பிரபல போஸ்டரில், கிராஃபிக்ஸ் மூலம் தனது முகத்தை மாற்றி, பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாகி வருகிறது.

தற்போது ஐபிஎல் 16வது சீசன் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வரும் நிலையில், அதில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர், ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரரான இவர், 103 டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்களும், 34 அரை சதங்களும் அடித்துளளதோடு, 142 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 19 சதங்களும், 27 அரைசதங்களும் அடித்துள்ளார்.

இதையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் 16வது சீசன் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகீறார். இந்த ஐபிஎல்லில், இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 285 ரன்களைக் குவித்து அதிரடியாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதளத்திலும் பிஸியாக இருந்துவரும் டேவிட் வார்னர், ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நிலையில் அது படு வைரலாகி வருகிறது.

அதாவது, பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில், 'புஷ்பா 2' படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் அல்லு அர்ஜூன் நகை, புடைவை அணிந்து செம மாஸ் கெட்டப்பில் ஒரு போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது அந்த புகைப்படத்தில், கிராஃபிக்ஸ் மூலம் தனது முகத்தை மாற்றி, அந்த புகைப்படத்தை டேவிட் வார்னர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அச்சு அசல் புஷ்பா போலவே காட்சியளிக்கு அவரது புகைப்படம் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டு, தற்போது 1 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைப் பெற்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com