இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக மும்பையை துவம்சம் செய்த சென்னை அணி!

இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக மும்பையை துவம்சம் செய்த சென்னை அணி!
Published on

விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் இன்றைய 49வது லீக் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடியது. இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து விளையாட வந்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிரீன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.

அடுத்து ஆடவந்த சூரியகுமார், வதேரா ஜோடி சிறிது நேரம் களத்தில் நின்று ஆடியது. மூன்று பவுண்டரிகளோடு சேர்த்து மொத்தம் 26 ரன் எடுத்த நிலையில் சூரியகுமார் அவுட் ஆனர். அதைத் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆடத் தொடங்கிய வதேரா 64 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்ததாக, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் எடுத்த 20 ரன்களைத் தவிர, மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி ரன் எடுக்கவில்லை. இருபது ஓவர்கள் முடிவில் மும்பை அணி 139 ரன்கள் எடுத்தது. தொடக்கம் முதலே சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய சென்னை அணியின் தரப்பில் மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சென்னை அணி வெற்றி பெற 140 ரன்கள் என்ற இலக்கோடு ஆட வந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் கான்வே ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிது. 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை பறக்கவிட்ட ருதுராஜ் 30 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஆட வந்த ரஹானே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியோடு 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வழக்கம்போல் ராயுடு 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். களத்தில் நின்று விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கான்வே அரை சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தில் அடுத்து ஜோடி சேர்ந்த டூபே மற்றும் கேப்டன் தோனி இணை சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ஆட்ட முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னைஅணி  புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com