இலங்கை: கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்து… 7 பேர் பலி!

Srilanka Car Race Accident
Srilanka Car Race Accident

இலங்கையில் நடந்த கார் பந்தயத்தின்போது, பந்தய கார் மக்கள் கூட்டத்தில் பாய்ந்ததால், 8 வயது சிறுவன் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 23 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர்.

பொதுவாக, கார் பந்தயம் என்றாலே, சிறுவர்களிலிருந்து இளைஞர்கள் வரை அனைவருமே விரும்பிப் பார்ப்பார்கள். அதேபோல், கார் பந்தயத்தின்போது மிகவும் அதிகமான பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படும். அதையும்தாண்டி சில மோசமான விபத்துகள் நடைபெறதான் செய்கின்றன. அப்படியொரு சம்பவம்தான், இப்போது இலங்கையில் நடந்துள்ளது.

2024ம் ஆண்டின் ஃபாக்ஸ் கார் சூப்பர் கிராஸ் என்ற கார் பந்தயம் நேற்று பரபரப்பாக நடந்துவந்தது. இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவ என்ற பகுதியில் இந்த கார் பந்தயம் நடந்தது. அந்த கார் பந்தயத்தைப் பார்க்க கிட்டத்தட்ட 45 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். அப்போதுதான் இந்த மோசமான விபத்து நடந்துள்ளது.

அந்தப் பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ட்ரேக்கில் சென்றுக் கொண்டிருந்த கார், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ட்ரேக்கைவிட்டு மக்கள் கூடியிருந்த கூட்டத்திற்குள் பாய்ந்தது. அதனை எதிர்ப்பார்க்காத மக்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். இதில் 8 வயது சிறுவன் உட்பட 6 பேர் நேற்று உயிரிழந்தனர்.

காயமடைந்த 20 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமத்திக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

இதையும் படியுங்கள்:
பெங்களூருவைத் தொடர்ந்து மும்பையிலும் தண்ணீர் தட்டுப்பாடு… தவிக்கும் மக்கள்!
Srilanka Car Race Accident

இதுத்தொடர்பாக போலீஸார் கூறுகையில், “கார் ரேஸில் சிறிதும் எதிர்பாரா விதமாக இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 21க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேபோல் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 வயது சிறுவனும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த குழுவில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.” என்று கூறினார்.

மேலும், தற்காலிகமாக இப்போது அந்த கார் பந்தயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையும் மோசமாகவுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com