நெருக்கடியில் இலங்கை… உதவிக் கரம் நீட்டும் சீனா!

China and Srilanka
China and Srilanka

நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு உதவி செய்ய சீனா முன்வந்திருக்கிறது. இலங்கை அதன் கடனை அடைக்க சீன பிரதமரிடம் உதவி கேட்டிருந்த நிலையில் தற்போது சீன பிரதமரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையில் பால், எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. இதனால் மக்கள் எழுப்பிய போராட்டங்கள், அரசின் திணறல் என அனைத்தும் ஒட்டுமொத்த ஆசியாவையும் அச்சமடைய வைத்தது. அந்த அளவிற்கு இலங்கை மோசமான நிலையில் இருந்தது. அந்த நிலையை போக்க இலங்கை அரசுக்குப் பிற நாடுகளில் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டது. தற்போது அந்த நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை மீண்டு வருகிறது என்றாலும் முழுவதுமாக வெளியே வரவில்லை என்றே கூற வேண்டும்.

இலங்கை ஐஎம்எஃபிடம் கடன் வாங்கியது. என்னத்தான் கொஞ்சம் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும் கடனை அடைக்கும் அளவிற்கு வளரவில்லை என்பதே உண்மை. ஆகையால் கடனை அடைக்க இலங்கைத் திணறி வருகிறது. இந்தநிலையில்தான் சீனா உதவிக் கரம் நீட்ட முன்வந்திருக்கிறது.

சீனா கொடுத்த கடனை அடைக்க இலங்கை கால அவகாசம் கேட்டது. அதனை சீன அரசும் ஒப்புக்கொண்டது. அதேபோல் மற்ற கடன்களை அடைக்க சீனாவிடம் 2.9 மில்லியன் டாலர் அளவில் கடன் கேட்டது. இதனையடுத்து சீனா அதனை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல் கொழும்பு விமான நிலையத்தையும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மேம்படுத்த நிதியுதவி வழங்குவதாகவும் சீனா கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
உயர்தர கல்விக்கு 500 கோடி நிதியை வழங்கும் மஹிந்திரா குழுமம்!
China and Srilanka

ஏற்கனவே இலங்கை அரசு 2017ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குத் தாரை வார்த்தது. இன்னும் 99 ஆண்டுகள் இது சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அந்த இடத்தில் சீனா எந்த ராணுவ நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டாலும் சீனாவின் உளவு கப்பல் அந்த இடத்தில் இருக்க எந்தத் தடையும் இல்லை.

இந்தநிலையில் கொழும்பு விமான நிலையத்தை மேம்படுத்த நிதியுதவி வழங்கிய சீனா எந்தத் திட்டத்துடன் கொடுத்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை உதவி செய்வது போல் செய்து கொழும்பு விமான நிலையத்தைக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டது என்றால் இந்தியாவிற்குதான் இது பெரும் சவாலாக அமையும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com