இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலிக்கு 53-வது பிறந்தநாள்: 25 ஆண்டுகால திரைப் பயணமும் 5 சிறந்த படங்களும்..!

25 ஆண்டுகால திரைப் பயணம்: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் 53-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
SS Rajamouli
SS Rajamouli
டாக்டர் முலுகு. எஸ். நீலோத்பல்

டாக்டர் முலுகு எஸ். நீலோத்பால், வேலூர் தொழில்நுட்பக் கழகத்தில் (VIT) அரசியல் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்திய அறிவு அமைப்பில் (IKS) நிபுணத்துவம் பெற்ற இவர், அரசியல் கோட்பாடு மற்றும் கலாச்சார ஆய்வுகள் (இந்தியத் திரைப்படங்கள் குறித்த ஆய்வுகள் உட்பட) ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி கொண்டவர். பல மொழிகளை அறிந்த இவர், பல்வேறு இந்திய மொழிகளில் எழுதும் திறன் கொண்டவர்; அச்சு ஊடகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

Updated on: 

இந்திய சினிமாவை புரட்டிப்போட்டு வணிகரீதியாகவும், சினிமா இயக்க ரீதியாகவும் பெரும் மாற்றங்களை கொண்டுவந்தவர் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி!

ஒரு ஈயை நாயகனாக்குவதும் ,ஒரு கோழையை வீரனாக்குவதும் ,ஒரு சுதந்திர வீரர் கதைக்கு கற்பனை ஜோடிப்பதும் ,ஒரு வீராதி வீரனுடைய கதையும் எப்படி சுவாரஸ்யமாக சொல்லணும் என்று இந்த அற்புத இயக்குநருக்கே தெரியும் போலும் !

அக்டோபர் 10 ஆம் தேதி தன் 53ஆம் பிறந்தநாள் கொண்டாடுகிற ராஜமவுலிக்கு இந்த 2026 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டு ! ஆம் ! அவருடைய முதல் படமான 'ஸ்டுடென்ட் நம்பர் ஒன் ' விடுதலையாகி செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதிக்கு 25 ஆண்டுகள் நிறைவுறுகிறது !

இந்த தருணத்தில் அவர் தன்னுடைய அடுத்த அற்புத படைப்பான 'வாரணாசி 'படத்தின் வேளைகளில் மும்முரமாக ஈடுபடுகிறார் .

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர் ஆர் ஆர்' (RRR) திரைப்படம், சர்வதேச திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் 'ஆஸ்கார்' விருதை (சிறந்த பாடல்/இசைக்காக) எம். எம். கீரவாணிக்கு பெற்றுத் தந்தது. இந்த சாதனையின் மூலம் ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை தெலுங்கு திரையுலகிற்கு பெற்று தந்தவர் ராஜமௌலி..!

ராஜமௌலியின் இந்த பிறந்தநாளில் அவருடைய 5 சிறந்த திரைப்படங்களைப் பார்க்கலாம்!

1. ஈகா (2012) :

ஒரு படைப்பாளியின் கற்பனைக்கு எல்லைகளே இல்லை என்று நிரூபித்த படம் 'ஈகா'. தமிழில் 'நான் ஈ' என்று வெளியான இத்திரைப்படம், வழக்கமான திரைக்கதை பிம்பங்களை உடைத்தெறிந்த ஒரு படைப்பு! படத்தில் கதாநாயகன் ஒரு ஈயாக மாறி வில்லனை பழிவாங்கும் கதையை, புதுவிதமான தொழில்நுட்பத்துடனும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (CGI) உதவியுடனும் ஒரு காலத்தால் அழியாத காவியமாகப் படைத்தார் ராஜமௌலி. விமர்சகர்களின் கண்ணோட்டத்தில் இதுவே ராஜமௌலியின் சிறந்த திரைப்படமாகும்! நடிகர் நானிக்கு சர்வதேச புகழை பெற்று தந்த படமும் இதுவே.

naan ee
naan eesource:twitter

2. மகதீரா (2009)

ஒரு புனர்ஜென்ம காதல் கதை எப்படி ராஜா ராணி கதை மாதிரி திரை ரசிகர்களுக்கு கட்டலாம் என்ற ஒரு எண்ணத்துக்கு திரை ரூபம் தான் இந்த மகதீரா படம். இந்த படத்தின் மூலமாக நடிகர் ராம் சரணுக்கு அழியா புகழ் வந்தது . தன் காதலிக்காக எந்த அளவுக்கும் செல்கின்ற ஒரு காதலனாக ராம் சரண் நடிப்பு அலாதியாக இருக்கும்.

மகதீரா
மகதீராsource:Reddit

3. பாகுபலி : பாகம் ஒன்று (2015)

இந்திய சினிமாவின் சிறந்த நுறு படங்களில் ஒன்றாக இடம் பிடித்த இந்த படம் ,ராஜமவுலியின் பிரமாண்டம் எந்த அளவுக்கு இருக்கும் என்று நிரூபித்தது . நடிகர் பிரபாஸ் தன்னுடைய நடிப்பு ,தோற்றம் ,கம்பிரம் கொண்டு உலக சினிமாவில் மறக்க முடியாத கதாபாத்திரமாக மாறி ரசிகர்களின் வரவேற்பு பெற்றார் . கட்சி அமைப்பு ,கேமரா கோணங்கள் இயங்குகிற ரீதி , பின்னணி இசை அதன் சிறப்பு ,போர் காட்சிகள் அமைப்பு என்று திரை பிரம்மாண்டத்தின் ஒரு உச்சியை காண்பித்தார் ராஜமவுலி.

bahubali
bahubali

4. பாகுபலி : பாகம் இரண்டு (2017)

இந்தியா சினிமா வரலாற்றிலேயே அடிக்க வசூல் சந்தித்த ஒரே ஒரு படம் பாகுபலி இரண்டாம் பதிப்பு ! இரட்டை வேடங்களில் பிரபாஸ் ஜொலித்த இந்த படம் ,ராஜமவுலியின் படைப்பாற்றலும் ,கிரவாணியின் இசையும் சேர்ந்து ஒரு காவியமாகவே உருவெடுத்தது !சிவகாமி ,தேவசேனா ,அவந்திகா என்று வலுவான பெண் கதாபாத்திரங்களும் இதில் அடங்கும்.

Bahubali
Bahubali

5. ஆர் ஆர் ஆர் (2022)

இந்தியா கண்டா இரண்டு சுதந்திர வீரர்களை கற்பனை வளம்கொண்டு நண்பர்களாக மாற்றி அவர் எப்படி சுதந்திர தீயை பரப்பினர் என்று ராஜமவுலி பாணியில் சொன்ன படம் ,ஆர் ஆர் ஆர் . இந்தியா சினிமாவுக்கு முதல் ஆஸ்கார் விருது கொடுத்த பெருமை ராஜமவுலிக்கு ஈட்டித்தந்த படம் . இசை ,நடனம், உணர்ச்சிகள் ,தேசப்பற்று எல்லாம் கலந்த ஒரு படைப்பு இது !

RRR
RRR

இப்படி புது புது பரிமாணங்களில் திரை துறைக்கு ஒரு அபூர்வமான திரை மொழியை தந்த ராஜமவுலி உலகின் 10 சிறந்த திரை படைப்பாளிகளில் இடம் பிடித்தார் ! அவருடைய அடுத்த் படம் வாரணாசி இன்னும் புதிய உயரத்துக்கு இந்திய சினிமாவை கொண்டு செல்லும் என்று சொன்னால் ஐயமில்லை !

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜமவுலி !

இந்திய திரையுலகம் உங்களை ஒரு பாகமாக பெற்றதில் பெருமை கொள்கிறது !

logo
Kalki Online
kalkionline.com