

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எல்லை பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP), சாஸ்திர சீமா பால் (SSB), செயலக பாதுகாப்புப் படை (SSF), இந்த படைகளில் உள்ள காஸ்டபிள் (General Duty) பதவி மற்றும் அசாம் ரைபிள்ஸ் (AR) ரைபிள்மேன் ஆகிய பதவியில் உள்ள காலிப்பணியிடங்கள் எஸ்எஸ்சி மூலம் நிரப்பப்படுகிறது.
அதன்படி, 2025ஆம் ஆண்டு ஆண்கள், பெண்கள் சேர்ந்து மொத்தம் 25,487 காலிப்பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில் பாதுகாப்பு படை 14,595, எல்லை பாதுகாப்பு போலீஸ் 616, ரிசர்வ் போலீஸ் படை 5490, எஸ்.எஸ்.பி., 1764, இந்தோ திபெத் எல்லை போலீஸ் 1293, அசாம் ரைபிள்ஸ் 1706, எஸ்.எஸ்.எப்., 23 என மொத்தம் 24,487 இடங்கள் உள்ளன.
காலியிடங்களின் விவரம்
BSF – 616 (ஆண்கள் – 524, பெண்கள் – 92)
CISF – 14595 (ஆண்கள் – 13135, பெண்கள் – 1460)
CRPF – 5490 (ஆண்கள் – 5366, பெண்கள் – 124)
SSB – 1764 (ஆண்கள் – 1764)
ITBP – 1293 (ஆண்கள் – 1099, பெண்கள் – 194)
AR – 1,706 (ஆண்கள் – 1556, பெண்கள் - 150)
SSF – 23 (ஆண்கள் - 23)
கல்வித்தகுதி: இந்த பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1ஆம் தேதிக்குள் கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.01.2026 அன்று 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகப் படியாக 23 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.2003 தேதிக்கு முன்னரும், 01.01.2008 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தரநிலை தேர்வு, மருத்துவ பரிசோதனை போன்ற அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் தகுதி பெறுபவர்கள் மட்டுமே இறுதித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
சம்பள விவரம் : மேற்கண்ட பணிகளுக்கு மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, வேலுார், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய பாதுகாப்பு படையில் காண்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் இணையம் (ஆன்லைன்) வழியாக விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும். அதன்பிறகு, கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதில் பெண்கள், பட்டியல், பழங்குடி, முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த ஜனவரி 1ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜனவரி 1ஆம் தேதி 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், இப்பணியிடங்களுக்கு தேர்வு 2026 பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம்.