உடனே விண்ணப்பீங்க..! 3073 Sub-Inspector காலியிடங்கள் அறிவிப்பு..!

Police Job
Police Job
Published on

நிறுவனம் : Staff Selection Commission (SSC)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 3073

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 26.09.2025

கடைசி நாள் : 16.10.2025

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டிகிரி படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 3073 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பதவி: Sub-Inspector

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்கள்: 3073

காலியிடங்களின் விவரம்

  • மத்திய ரிசர்வ் போலீஸ் (CAPF) – 2861

  • CRPF – 1029

  • BSF – 223

  • ITBP – 233

  • CISF – 1294

  • SSB – 82

  • டெல்லி போலீஸ் – 212 (ஆண்கள் – 142, பெண்கள் – 70)

கல்வி தகுதி: டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.08.2025 அன்று 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

விண்ணப்ப கட்டணம்:

  • Women/ST/SC/Ex-s – கட்டணம் கிடையாது

  • Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  • Paper-I ( Computer Based Examination)

  • Physical Standard Test (PST)/ Physical Endurance Test (PET)

  • Paper-II (English language & Comprehension)and Detailed Medical Examination (DME)

கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

ஆங்கில மொழி அறிவுத்தேர்வானது, 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் 200 வினாக்கள் இடம்பெறும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
இப்படிச் செய்தால் உங்களுக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு கிடைக்கும்..!
Police Job

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com