
நாடு முழுக்க பொதுமக்கள் மலிவான விலையில் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ரேஷன் கார்டு அவசியமாகும். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பலரும் பலனடைந்து வருகின்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயன் பெறவும் ரேஷன் கார்டு அவசியம்.
இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் புதிதாக ரேஷன் கார்டு வாங்குவது மிகவும் கடினமாகி விட்டது. ஏனெனில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் பல மாதங்களாக ரேஷன் கார்டு வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பிறகு கடந்த ஆண்டு இறுதியில் தான் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில் ஒரே நாளில் புதிய ரேஷன் கார்டைப் பெற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் ஒரே நாளில் ரேஷன் கார்டைப் பெறுவதற்காகவே வாரந்தோறும் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெறும். இந்தக் முகாம்களில் புதிய ரேஷன் கார்டு, பென்சன் மற்றும் பட்டா பெற விண்ணப்பிக்கலாம். குறிப்பாக வறிய நிலையில் இருக்கும் குடும்பம் மற்றும் அவசரத் தேவை உள்ளவர்களுக்கு நிச்சயமாக ஒரே நாளில் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனே ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்குமே ஒரே நாளில் ரேஷன் கார்டு கிடைக்குமா என்று கேட்டால், அது கொஞ்சம் கடினம் தான். இருப்பினும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் நேரடியாக கொடுக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பர். இச்சமயத்தில் அவசரத் தேவைக்காக யாரேனும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், அவர்களுக்கு உடனே ரேஷன் கார்டு கிடைப்பது உறுதி.
இது தவிர்த்து மாதந்தோறும் நடைபெறும் பொது விநியோகத் திட்ட குறைதீர்ப்பு முகாம்களுக்குச் சென்றும் புதிய ரேஷன் கார்டுக்கு மனு கொடுக்கலாம். இப்படிச் செய்வதால், ஒரே நாளில் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு உடனே கிடைத்து விடும்.
குறைதீர்ப்பு முகாம்களை மிகச சரியகப் பயன்படுத்திக் கொணடால், ரேஷன் கார்டு மட்டுமல்ல அரசின் மற்ற திட்டங்களிலும் பலன் பெற முடியும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கூட புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த முகாம்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க நீண்ட காலம் ஆகும். ஏனெனில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் எண்ணற்ற மனுக்கள் குவிகின்றன என்பதால், உடனடியாக தீர்வு கிடைப்பது சற்று கடினம் தான்.