தமிழகமெங்கும் கருப்பு கொடி பறக்க விடும் போராட்டம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது . நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மசோதா நாளை தாக்கலாக உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர் அவர்களுடன் ஆலோசனை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் நாளை கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக காணொலி மூலம் முதல்வரின் அறிவிப்பு பகிரப்பட்டுள்ளது

நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும் பொது இடங்களிலும் நாளை கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி15) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உயரட்டும் கருப்புக்கொடி!

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!

தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.

தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!

தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில், டெலிமிடேஷன் (Delimitaion) சட்ட திருத்தம் தமிழ்நாட்டுக்கும் தென் மாநிலங்களுக்கும் அழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி . தென் இந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பாஜக. தென் மாநிலங்கள் பாதிப்பு அடையாது என்பதற்கான உத்தரவாதத்தை தர வேண்டும் மத்திய அரசு.

மேலும் தமிழ்நாட்டின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்க வில்லை என்றால் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளார் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விஜய் யாருக்கு ‘ஸ்கெட்ச்’ போடுகிறார்? சீமான் விமர்சனம்.!
முதல்வர் ஸ்டாலின்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com