சென்னை மக்கள் கவனத்திற்கு..! நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு..!

ungaludan stalin camp
ungaludan stalin campimg credit-sarkariyojana.com
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (23.7.2025) மாதவரம் மண்டலம், வார்டு-24ல் புனித அந்தோணி நகர், ஜி.என்.டி. சாலையில் உள்ள தியா திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-41ல் மணலி சாலை, எச்.6, காவல் நிலையம் அருகில் உள்ள பாரத் பெட்ரோல் பேங்க் வாகன நிறுத்த இடம், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74ல் பெரம்பூர், மல்லிகாபுரம், கிருஷ்ணதாஸ் பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111, மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள சமூக நலக்கூடம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-148ல் நெற்குன்றம், என்.டி. பட்டேல் சாலை, ஜி.எம். மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194ல் ஈஞ்சம்பாக்கம், கைலாஷ் கார்டன் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
ஓடவே தெரியாத 5 உயிரினங்கள்: ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!
ungaludan stalin camp

பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com