

தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் பரப்புரைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. தாராபுரம் தொகுதியின் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க, திமுக தலைவர் முக. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின், " தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என்றால், அந்த நெற்களஞ்சியதற்கே விதைகளை அனுப்பும் விதை களஞ்சியம் தான் தாராபுரம். தென்னை மற்றும் மஞ்சள் உற்பத்தியிலும் சிறந்து விளங்கும் ஊராகவும் இருக்கிறது. தாராபுரம் மக்களாகிய உங்களிடம், நான் வாக்கு கேட்டு மட்டும் வரவில்லை. நியாயம் கேட்கவும் வந்திருக்கிறேன்.
ஒருத்தர் கிட்ட பெட்டி பெட்டியாக பணத்தை திணித்த காரணத்தினால் , மக்களாக இருக்கக்கூடிய உங்கள் மேல் இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டு இருக்கிறது. பெட்டியை கொடுத்தது யார் ? பெட்டியை வாங்கியது யார்? என்று உங்களுக்கே தெரியும். நீங்கள் கட்டிய வரி பணத்தில் தான் இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடைபெற வைத்த துரோகிக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
அதிமுகவை உடைத்து பல எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை செயற்கையாக வர வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இதற்கு முன் இப்படி ஒரு இடைத்தேர்தல் வந்துள்ளதா? விஜய் ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை கேவலப்படுத்தும் முதல்வர் விஜய்க்கு தாராபுரம் மக்கள் சரியான மரண அடியை தர வேண்டும், என்று பேசியிருந்தார்.
மேலும் பேசிய அவர் , "தமிழகத்தில் விஜய் பெயர் ரிப்பேர் ஆகிவிட்டது என்பதால், கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து தளபதி விஜயின், இல்லை டல்பதி விஜய் என்று கூறி பொய்யான செய்திகளை மற்ற மாநிலங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் கூறும் பொய்யில் தமிழ்நாட்டின் எல்லா தெருக்களிலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு செய்கின்றனர் என்று கூட செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் சிறுமிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை பா*யல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் விலைவாசியும் கொலைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது. 4 மாத ஆட்சியில் தமிழகம் நாறிப் போய்விட்டது. ரீல்ஸ் சிஎம் விஜய் மீடியா என்றாலே பயப்படுகிறார். இந்த லட்சணத்தில் அவர், வாய திறங்க ஸ்டாலின் சார, என என்னைப் பார்த்து காட்டுக் கத்தல் கத்துகிறார்.
நானும் இப்போது கத்துகிறேன் சிஎம் சார். நான் எல்லாவற்றிற்கும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தலைமை தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் பேச மாட்டேங்கிறீங்க? இதை நான் கேட்கவில்லை, உங்களுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் கேட்கின்றன. என்ன சார் பயம்? சிஎம் சார் என்ன பயம்?
இந்தியாவில் உள்ள எல்லா தலைவர்களும் பேசிய விவகாரத்தில் நீங்கள் பேச என்ன பயம்? பிஜேபி என்றால் அவ்வளவு பயமா சிஎம் சார்? பிஜேபியின் கிளை தான் தவெக என்று அவர்களே ஒத்துக் கொள்கிறனர்," என்று குற்றம் சாட்டினார்.
மிசா சிறைவாசத்தின் போது நான் சந்தித்த கொடுமைகளை கிண்டல் செய்யும் இடமாக சட்டமன்றத்தை முதல்வர் விஜய் மாற்றிவிட்டார். சீப் மினிஸ்டரா(chief minister) இருங்க சிஎம் சார். இப்படி சீப் மினிஸ்டரா(Cheap Minister) இருக்காதீங்க. என்று ஸ்டாலின் காட்டமாக பேசி இருந்தார்.