நான் மக்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த பார்க்கிறேன்! ஸ்டாலின் தன் குடும்ப வங்கியில் பணத்தை போடப் பார்க்கிறார் - எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!

நான் மக்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த பார்க்கிறேன்! ஸ்டாலின் தன் குடும்ப வங்கியில் பணத்தை போடப் பார்க்கிறார் - எடப்பாடி பழனிச்சாமி
Admk
Edappadi Palanichami youtube
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

மேட்டுப்பாளையத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி இன்றைய பிரச்சாரத்தில் , திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 8000 ரூபாய் கூப்பனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.

ஆட்சியில் இருந்த போது எதுவும் செய்யாமல் இப்போது ஸ்டாலின் கூப்பன் கொடுக்கிறாராம். அவர் எதற்காக கூப்பன் கொடுக்கிறார் தெரியுமா? அதில் ஒரு கமிஷன் வரும் என்று கொடுக்கிறார். திமுககாரர்கள் எல்லாம் கூப்பனை விற்கிறார்கள். திமுக 100% ஆட்சிக்கு வரப்போவதில்லை!

அவர்களின் தேர்தல் அறிக்கைகள் கூட , கருணாநிதியின் குடும்பத்திற்கு என்ன லாபம் கிடைக்கும்? என்பதை அடிப்படையாகக் கொண்டே தயாரித்துள்ளார். இதே அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பாருங்கள்!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10000 ரூபாய் சிறப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்படும். நாங்கள் வங்கியில் பணம் போட பார்க்கிறோம்! அவரோ தங்கள் குடும்ப வங்கியில் போட பார்க்கிறார்! திமுகவின் கூப்பன் அறிவிப்பில் ஒரு உயிர் போனதுதான் மிச்சம். என்று எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தில் பேசியுள்ளார்!

logo
Kalki Online
kalkionline.com