இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? என்பது குறித்து பிரசாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
STALIN
STALIN
Published on

தமிழகத்தின் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக அரசு மகளிர் வாக்குகளை கைப்பற்றும் நோக்கில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த இல்லத்தரசி ரூ 8000 கூப்பன் திட்டம் மகளிர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். அதாவது வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.

இந்த கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன், மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்கி கொள்ளலாம். அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானவரித்துறை கட்டாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த கூப்பன் கொடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்பட்டார்களோ அதனடிப்படையில் ரூ.8000 கூப்பன் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ 8000 மதிப்புள்ள கூப்பன் கொடுத்தற்கான காரணம் பற்றியும், பொருளாக தாராமல் ஏன் கூப்பன் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் - முதலவர் ஸ்டாலின் அறிவிப்பு..!
STALIN

இந்த கூப்பனை பயன்படுத்தி இல்லதரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே, உங்களுக்கு பிடித்த கடையில், உங்களுக்கு விருப்பமான பிராண்ட் மற்றும் மாடலாகப் பார்த்து, பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதற்காக தான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 8,0000 மதிப்பிலான கூப்பன் கொடுக்கப் போகிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com