அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி மாதம் ரூ.50,000 உதவித்தொகை!

Anna University Ph.D
Anna University Ph.D
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 கல்வி ஆண்டிற்கான பி.எச்.டி படிக்கும் முழு நேர மாணவர்களுக்கு, அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை (Stipend) உயர்த்தி வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் (CEG, ACT, MIT, SAP) Ph.D. பயிலும் மாணவர்களுக்கான மாத ஊக்கத்தொகை ரூ.25,000-லிருந்து ரூ.50,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பொறியியல் மற்றும் உறுப்புக் கல்லூரிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேர்க்கைக்கான விண்ணப்பங்களை cfr.annauniv.edu இணையதளத்தில் வரும் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள் உட்பட 350க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 150 இடங்களும், அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தலா 50 இடங்களும் என 250 பி.எச்.டி மாணவர்கள் என இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த ஊக்கத்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் படிக்கும் பி.எச்.டி மாணவர்களுக்கு இதுவரை மாதம் தோறும் ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது அது ரூ.50,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல அரசு இன்ஜினியரிங் மற்றும் உறுப்பு கல்லூரிகளிலும் முதல்முறையாக பி.எச்.டி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எச்.டி சேர்க்கைக்கான மாணவர்கள் cfr.annauniv.edu இணையதளத்தில் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை உயர்வு ஆராய்ச்சி மாணவர்களின் நிதி நெருக்கடியைக் குறைத்து கல்வியில் சிறந்து விளங்க உதவும்.

இதையும் படியுங்கள்:
உங்ககிட்ட தரிசு நிலம் இருக்கா..? – மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கலாம்; மத்திய அரசின் அசத்தலான திட்டம் இதோ!
Anna University Ph.D

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுகலை (M.E, M.Tec, M.Arch) மாணவர்களுக்கு 2026 - 2027 கல்வியாண்டு முதல், செமஸ்டருக்கு ரூ.60,000 கல்வி உதவித்தொகையும் இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com