அரபிக்கடலில் உருவான அஸ்னா புயல்… குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Gujarat Rain
Gujarat Rain
Published on

குஜராத்தில் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்து வந்தது. இதனையடுத்து அரபிக்கடலில் புயல் உருவாகியுள்ளது.

குஜராத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழைக் காரணமாக, குஜராத்தின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், சுமார் 1,200 பேர், இந்த மழையின் கோரத் தாண்டவத்திலிருந்து மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அப்படியும் சுமார் 29 பேர் இந்த மழைக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விஸ்வமித்ரி உள்ளிட்ட ஆறுகளில் அளவை விட அதிகமாக வெள்ளம் பாய்ந்ததால், அருகில் இருக்கும் வீடுகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இன்னும் மழை மற்றும் வெள்ளத்தின் விளைவுகளிலிருந்தே வெளிவராத மக்களுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது புயலாக வலுவாகியுள்ளது. இந்த புயல், கட்ச் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
போலியோ பரவல் எதிரொலி: காசாவில் போர் நிறுத்தம்... இஸ்ரேல் எடுத்த முடிவு!
Gujarat Rain

இந்த புயலின் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த புயலுக்கு பாகிஸ்தான் அஸ்னா என்று பெயர் வைத்துள்ளது. இது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று 11.30 மணி நிலவரப்படி இது குஜராத்தின் பூஜ் பகுதியில் இருந்து மேற்கு-வடமேற்கே 190 கி.மீ. அருகே மையம் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது வடகிழக்கு அரபிக்கடலில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து அடுத்த 2 நாட்களில் இந்திய கடற்பகுதியை விட்டு கடந்து விடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது குஜராத்தில் மழை படிபடியாக குறைந்து வருகிறது. இன்று வெரும் தூரல் மட்டுமே விழுவதால், மக்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டிருக்கின்றனர். ஆனால், வெள்ளம் மட்டும் இன்னும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com