அதிதீவிர புயலாக மாறியுள்ள 'மோக்கா' புயல்! தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அதிதீவிர புயலாக மாறியுள்ள  'மோக்கா' புயல்! தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை!
கல்கி டெஸ்க்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிதீவிர புயலாக மாறியுள்ளது. அதிதீவிர புயலாக மாறியது ‘மோக்கா’ புயல், இதனால் தெற்கு அந்தமான கடலுக்கு 14–ந்தேதி வரை செல்ல வேண்டாம் என தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து வருகிற 14ம் தேதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கரையை கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.

இதன் காரணமாக மேற்கு வங்க மாநிலம் திகாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை 8 குழுக்களையும், 200 மீட்புப் பணியாளர்களையும் தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2வது பட்டாலியின் குர்மிந்தர் சிங் கூறியுள்ளார். அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.

தெற்கு அந்தமான் கடலுக்குள் 14–ந்தேதி வரை செல்ல வேண்டாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மோக்கா புயல் எதிரொலியாக தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையருக்கும், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14–ந்தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

logo
Kalki Online
kalkionline.com