சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், துணை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், அதற்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் ஆயுத படையினருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் சூடான் துணை ராணுவப் படையினர் சூடான் தலைநகரில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாலியல் தொல்லைக்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன் இந்த குற்றங்கள் மிக மிக குறைவாகவே இருந்து வந்தன. ஆனால், போருக்கு மத்தியில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் நாட்டைக் காக்கும் ராணுவத்தினரே பெண்களுக்கு இந்த தொல்லைகளைக் கொடுக்கின்றனர்.
இதுகுறித்து அந்த நாட்டு மக்கள் கூரியதாவது, “பெண்களின் உடல்களை போர்க் கருவிகளாகவும், போர் ஆயுதங்களாகவும் பயன்படுத்துகின்றனர். மத்திய சூடானில் பெண்கள் தாங்கள் அனுபவிக்கும் கூட்டு பலாத்காரம் மற்றும் சித்ரவதைகளின் வலிகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.” என்று கூறுகின்றனர்.
சூடானில் நடைபெற்று வரும் போரால், பலர் புலம் பெயர்ந்து வருகின்றனர். ஆயுதமேந்திய படையினர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை குறி வைத்து சுற்றுவதாக ஐநா தெரிவித்தது. மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் அடிமைகளாக கடத்தப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் சூடானில் எந்த பகுதியும் பாதுகாப்பானது அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கெசிரா பகுதியில் 124 பேர் RSF தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
அதே பகுதியில் பாலியில் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். சூடானின் பல இடங்கள் SAF தரப்பிடம் உள்ளது. அதேபோல், சில இடங்கள் RSF தரப்பிடம் உள்ளது. இரண்டு அமைப்புகள் மீதும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு அமைப்புகளுமே குடிமக்கள் மீது போர் குற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன.
ஆவணப்படுத்தப்பட்ட பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் RSF அமைப்பே ஈடுபட்டுள்ளது.
இதனால் சூடான் மக்களுக்கு எங்கையும் எப்போதும் பாதுகாப்பே இல்லை என்ற நிலை வந்துள்ளது.