

தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு நடைபெற்று வருகிறது .
தமிழக வெற்றி கழகம் மகத்தான வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பல்வேறு பணிகளில் சீரமைப்புகள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றாக, மக்களின் அன்றாட வாழ்வுக்கு அவசியமான பொருட்களை மலிவு விலையில் மாதந்தோறும் அளிக்கும் நியாய விலைக் கடைகளில் தற்போது அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நியாய விலைக் கடைகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க உருவாக்கப்பட்டவை எனினும் இதிலும் சில இடங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் தவறுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
பொதுவாக குறைந்த அளவு பொருள் வழங்குதல் , தரமற்ற பொருட்கள், கையிருப்பு இருந்தாலும் பொருட்கள் ஸ்டாக் இல்லை என்று கூறுதல், கருப்புச் சந்தையில் விற்பனை செய்வது, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வாங்குதல். பொருள் வழங்காமல் “வழங்கிவிட்டோம்” என்று கணினியில் பதிவு செய்தல்.பயோமெட்ரிக் தவறாக பயன்படுத்துதல்.பொருட்களை வெளிச்சந்தைக்கு மாற்றுதல், நேரம் கடைபிடிக்காதது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நியாய விலைக் கடைகளில் சொல்லப்படுகிறது.
தற்போது ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகளில் பொருட்கள் உரிய எடையில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நியாயவிலை கடையில் பொருட்கள் சரியான எடையில் கிடைப்பதை உறுதி செய்ய மின்னணு தராசு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதில் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா? என எம்எல்ஏக்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
பொருட்களின் எடையை மக்கள் பார்க்கும் வகையில் இருபுறமும் டிஸ்ப்ளே வேலை செய்கிறதா என பணியாளர்கள் சரிபார்க்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நியாய விலை கடை பணியாளர்கள் இனி அதிக கவனமுடனும் விழிப்புணர்வு பணியாற்ற வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தலுடன் எச்சரிக்கை செய்துள்ளது அரசு. மேலும் தமிழகமெங்கும் உள்ள நியாய விலை கடையில் தவறுகள் கண்டறியப்பட்டால் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் தொடர்பான புகார்கள் பதிவு செய்ய அரசின் மாநில உணவுத்துறை உதவி எண்களை பயன்படுத்தலாம்.e-PDS தளங்களில் ஆன்லைன் புகார் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.