உங்களுடைய அரசியலில்தான் ஆபாசம் அதிகம் - ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சன்னி லியோன்

உங்களுடைய அரசியலில்தான் ஆபாசம் அதிகம் - ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சன்னி லியோன்

ந்திராவின் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணை சன்னி லியோனோடு ஒப்பிட்டு வம்புக்கு இழுத்த நடிகை ரோஜாவுக்கு, சன்னி லியோன் கடுமையான கண்டனத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

இது விவகாரம் தொடர்பாக சன்னி லியோன் கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவிர், “உங்களைப் போல் சினிமாவையும் தாண்டி ஆபாசமாக நடந்த கொள்பவள் நான் அல்ல” என்று சன்னி லியோன் கொடுத்துள்ள பதிலடி ஆந்திர வட்டாரங்களை கலகலக்க வைத்திருக்கிறது.

நடிகை ரோஜாவுக்கு சர்ச்சைக்கும் பஞ்சமில்லை. 90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, இயக்குநர் ஆர். கே. செல்வமணியுடனான திருமணத்திற்கு பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டினார். ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் இணைந்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றவர், தற்போது ஆந்திரா அரசில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார்.

ரோஜாவின் அதிரடி பேட்டிகள் ஆந்திராவில் வெகு பிரபலம். ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அரசியல் செய்து வரும் பவன் கல்யாண் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டால் கேலியும், கிண்டலுமாக பதிலளிப்பார். ஜெகன்மோகன் ரெட்டி அரசை 2024ல் தோற்கடிப்பேன் என்று பவன் கல்யாண் பேசியிருப்பது குறித்து ரோஜாவிடம் கேட்டபோது, முதலில் அவரை ஒரு சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்று காட்டட்டும் என்று பதிலளித்திருந்தார்.

2019ல் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் பவன் கல்யாண் தோற்றுப்போனார். அன்று முதல் பவன் கல்யாண் குறித்து பேச்சு வரும்போதெல்லாம் அவரது தோல்வியை பற்றி குறிப்பிட்டு ரோஜா சீண்டுவதுண்டு. இதனால் பவன் கல்யாணின் ஐன சேனா தொண்டர்கள் ரோஜாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் ரோஜா குறித்து பவன் கல்யாண் இதுவரை பேசியதில்லை.

இந்நிலையில் ஆந்திராவில் வாராஹி யாத்திரை மேற்கொண்டு வரும் பவன் கல்யாண், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டி பற்றி பவன் கல்யாண் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. பவன் கல்யாண் ஒழுக்கம் பற்றி பேசுவது, சன்னி லியோன் வேதம் ஓதுவது போல் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

ரோஜாவின் கமெண்ட், பவன் கல்யாண் ரசிகர்களை கோபப்படுத்தியதை விட சன்னி லியோனை அதிகமாக காயப்படுத்திவிட்டது. தன்னுடைய டிவிட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சன்னி லியோன், நான் ஒரு ஆபாச நட்சத்திரம்தான். ஆனால், கடந்த காலத்தை நினைத்து நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைப் போல் அல்லாமல் எதைச் செய்தாலும் வெளிப்படையாகவே செய்வேன். ஆபாச படவுலகை விட்டு எப்போதே வெளியேறிவிட்டேன். ஆனால், நீங்கள் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

ஜெகன்மோகன் ரெட்டியை யார் விமர்சித்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ரோஜா பதிலடி கொடுப்பதால் இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுவிடுவதாக ஜன சேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முதல்வருக்கு எதிராக யார் பேசினாலும், ரோஜாவிடமிருந்து பதிலடியை எதிர்பார்க்கலாம் என்று ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வட்டாரம் பெருமிதத்தில் மிதக்கிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com