இந்திய அஞ்சலகங்களில் (Post Office) முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களைக் கொண்டது. இது முற்றிலும் மத்திய அரசின் ஆதரவின் கீழ் இயங்கும் ஒரு திட்டம் ஆகும்.
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், இந்திய தபால் துறை தற்போது ஒரு புதிய, புரட்சிகரமான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு, அஞ்சலக ஆண்டு காப்பீட்டு பாலிசி திட்டம்(Post Office Insurance Policy Scheme) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பதால், இத்திட்டம் தற்போது சாமானிய மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்களைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம் வாங்க...
இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு வெறும் ரூ.565 முதலீடு செய்து வந்தால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெற முடியும் என்பது தான் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். அதிக பிரீமியம் கட்ட முடியாத ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மாற்றுக்கருத்தில்லை.
அதிக பிரீமியம், கடுமையான தகுதிகள் மற்றும் சிக்கலான ஆவண நடைமுறைகள் காரணமாக, பலரும் காப்பீடு எடுக்க தயக்கம் காட்டிவரும் நிலையில் இந்த அஞ்சலக ஆண்டு காப்பீட்டு பாலிசி திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். இந்த காப்பீடு திட்டம் குறைந்த வருமானம் ஈட்டும் ஏழை எளிய, சாமானிய, நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களை கருத்தில் வடிவமைக்கப்பட்டதாகும்.
மேலும், இந்த காப்பீடு திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதற்காக மருத்துவப் பரிசோதனைகள் அல்லது அதிகப்படியான ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்பதாகும். இதன் மூலம், மருத்துவப் பரிசோதனைக்கு செலவாகுமோ அல்லது உடல்நலக் காரணங்களால் அதாவது உடலில் நோய் ஏதாவது இருந்தால் இந்த காப்பீடு திட்டத்தில் சேரமுடியாதோ என்ற அச்சம் தேவையில்லை.
அஞ்சலகக் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* ஆண்டுக்கு வெறும் ரூ.565 மட்டுமே பிரீமியமாகச் செலுத்த வேண்டும். இது நாட்டில் இதுவரை இல்லாத மிகக் குறைந்த பிரீமியங்களில் ஒன்றாகும்.
* வெறும் ரூ.565 முதலீட்டிற்கு ஈடாக, காப்பீடுதாரருக்கு ரூ.10 லட்சம் வரை பாதுகாப்பு கிடைக்கிறது.
* இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட அனைவரும் சேர தகுதியானவர்கள்.
* இந்த திட்டத்திற்கு சேர மருத்துவப் பரிசோதனை கட்டாயம் இல்லை.
* விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர ஊனம், பகுதி ஊனம் மற்றும் மருத்துவமனைச் செலவுகள் போன்றவை இதில் அடங்கும். அதாவது இத்திட்டம் இயல்பான இறப்பை மட்டுமல்லாமல், விபத்து, முழுமையான மற்றும் பகுதியான இயலாமை ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நாமினி ரூ.10 லட்சம் வரை கோரலாம்.
* ஆயுள் காப்பீட்டைத் தவிர, விபத்து தொடர்பான காயம் ஏற்பட்டால் உள்நோயாளி சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் ரூ.1 லட்சம் வரையிலான மருத்துவ சலுகைகளும் பாலிசியில் உள்ளது.
* மேலும், பாலிசிதாரர்கள் போனஸ் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள்.
* விண்ணப்பித்து, பிரீமியத்தைச் செலுத்திய உடனேயே பாலிசி செயல்படத் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பாலிசிகளை எடுக்கும்போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே நாம் அதை பயன்படுத்த முடியும். ஆனால் இந்த திட்டத்தில் இந்த பாலிசி எடுத்த உடனே நாம் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பாகும்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை
பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
வருமானச் சான்று அல்லது வசிப்பிடச் சான்று (தேவைப்பட்டால்)
எப்படி விண்ணப்பிப்பது?
போஸ்ட் ஆபிஸ் இன்சூரன்ஸ் பாலிசி திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Sevak) அல்லது தபால் துறைக்கு நேரடியாக சென்று இந்த காப்பீடு திட்டம் குறித்து தபால்துறை ஊழியர்களிடம் கேட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு உதவவும், பாலிசியின் விதிமுறைகளை விளக்கவும் தபால் நிலைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தில் சேர சிக்கலான ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.