நடிகர்கள் பின்னால் சென்றால் ஆபத்து உங்களுக்குத் தான் - சூப்பர் ஸ்டார் எச்சரிக்கை..!

Rajinikanth
Rajinikanth
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியினர் பல்வேறு விதங்களில் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய பிரபலம் எனும் வகையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ரஜினிகாந்த் அவர்களின் ஒவ்வொரு செயலும் சொற்களும் தற்போது உற்று கவனிக்கப்பட்டு வருகிறது .

காரணம் அரசியலில் இருந்து அவர் விலகி இருந்தாலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பல கருத்துக்களுடன் விமர்சனங்களை தாங்கி வந்து கொண்டுள்ளது .

இந்நிலையில் ஜெயிலர் 2  திரைபடத்துக்காக ஹைதராபாத் சென்று படப்பிடிப்புகளை முடித்து விட்டு  சென்னைக்கு திரும்பிய நிலையில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தந்துள்ள பேட்டியில், நடிகர்கள் பின்னால் சென்றால் உங்களுக்கு தான் ஆபத்து என்று கூறியுள்ளார்.

மேலும் "கீழே விழுந்து காயப்பட்டால் அது உங்களுக்கு தான் ஆபத்து. படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். படிக்கும் காலத்தை விட்டால் காலம் முழுவதும் கஷ்டப்பட நேரிடும் .இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . அடிபட்டால் அவர்களுக்கு தான் பாதிப்பு. போதைப் பழக்கம் உள்ள நண்பர்கள் அருகே கூட சென்று விடாதீர்கள். " என்றெல்லாம் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் ஜனநாயகன் திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் இந்த புத்திமதிகளை பொதுவாக கூறினாலும் தற்போது அரசியலுக்கு வந்து இளைய தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருக்கும் பிரபலமான நடிகரின் பின் சென்று அசம்பாவிதங்களை சந்திக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு கூறப்பட்ட தனிசெய்தியோ என்ற கருத்துகள் தற்போது எழுந்துள்ளது.

எனினும் தற்போதுள்ள நடிகர்கள் மீதான மோகத்தை ரஜினிகாந்த்தின் அறிவுரை சிறிதளவேனும் குறைக்குமா என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
லோன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பினால் மக்கள் மகிழ்ச்சி..!!
Rajinikanth
logo
Kalki Online
kalkionline.com