துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு! நாளை வெளியாகிறது +2 ஹால் டிக்கெட்!

writing exam
examimage credit - hindutamil
Published on

பிளஸ் 2 தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் வரும் 25ம்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளோர் மேற்கண்ட இணைய தளத்தில் தங்களின் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித் தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்துள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர்களை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.துணைத் தேர்வுக்கான தேர்வு அட்டவணை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது சரியா? உலக நாடுகள் கருத்து... அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு!
writing exam

அதபோன்று, 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்காக விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வரும் 26ம்தேதி வியாழக்கிழமை முதல் 28ம்தேதி வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.மேலும் இத்தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்ற கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஹால் டிக்கெட் இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com