

இந்தியாவில் செயலற்ற கருணைக் கொலை அதாவது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு குணமடைய வாய்ப்பில்லாத நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துவது, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. 2011ல் அருணா ஷான்பாக் வழக்கிலும், 2018ல் காமன் காஸ் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் நோயாளியின் "கண்ணியத்துடன் இறக்கும் உரிமை"யை உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக கருணைக் கொலை செய்யப்படும் உத்தரப்பிரதேச இளைஞர் ஹரிஷ் ராணா. கடந்த 2013 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். மாடியில் இருந்து விழுந்த ஹரிஷ் ராணவுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 13 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக படுத்த படுக்கையாக இருக்கிறார். அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
13 ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் 32 வயது நிரம்பிய இளைஞர் ஹரிஷ் ராணா என்பவருக்கு உச்சநீதிமன்றம் இன்று முதல் முறையாக 'செயலற்ற கருணைக் கொலைக்கு அனுமதி அளித்துள்ளது. 2013இல் விபத்தில் சிக்கிய அவருக்கு செயற்கை சுவாசத்தை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளைஞரை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்மனு ஒன்றை தாக்கல் செய்தனர். கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் இந்த மனுவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர் ஹரிஷ் ராணாவை கருணைக்கொலை செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் இளைஞருக்கு உயிர் நீக்க சிகிச்சை அளிப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று, கனிவான முறையில், உயிரிழப்பைத் தூண்டும் கருவிகளை அகற்ற(Passive Euthanasia) உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2018ல் உச்சநீதிமன்றம் 'செயலற்ற கருணைக்கொலை'யை சட்டபூர்வமாக்கியது. தற்போது நடைமுறையில் இது ஒரு முக்கிய தீர்ப்பாக கருதப்படுகிறது. அத்துடன் இதுபோன்ற நோயாளிகள் மாண்புடன் உயிர் நீக்க உரிமையைப் பெற்றுள்ளனர் என்று உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே 2018 மற்றும் 2023ம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தால் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று அந்த மனுவை ஏற்று, கருணைக் கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது..