ஊடக செய்திகளை வைத்து தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க முடியாது! ஆதாரம் வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஊடகச் செய்திகளை மட்டும் வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து.
Supreme judge suryakanth
Supreme Court judge
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

நாடு முழுக்க தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இவர்களுடன் காக்ரோச் ஜனதா பார்ட்டி, டெல்லி மற்றும் மும்பையில் இடதுசாரி மாணவர் அமைப்புகளை திரட்டி போராடி வருகிறது. இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக, "தலைமை தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் , தலைமை தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற இரண்டு ஆணையர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்காமல் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்ததாக," இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் தொடங்கியது.

இந்த செய்தியை தொடர்ந்து அபிஜித் தீப்கே தலைமையிலான காக்ரோச் ஜனதா பார்ட்டி உடனடியாக போராட்டத்தில் இறங்கியது. தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணியில்(SIR) ஈடுபட்டதால் தான், எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோல்வியுற்றது, என்று இந்த கட்சி குற்றம் சாட்டியிருந்தது. எஸ் ஐ ஆர் பணியில் நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களையும் மீண்டும் இணைக்க வேண்டும் என்று, நிபந்தனையை வலியுறுத்தியும் , தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் தனது போராட்டத்தை தொடங்கியது.

இது தொடர்பாக ராகேஷ் குமார் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

உச்சநீதிமன்றத்தில் ராகேஷ் குமாரின் வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதாடுகையில்,"தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அதன் செயல்பாடுகள் சட்டத்திற்கு உட்பட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருதலை பட்சமானது. தலைமை தேர்தல் ஆணையருக்கு வழங்கப்படும் வழக்குத் தொடரப்படுவதற்கு எதிராக பாதுகாப்பு, பிரதமருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கூட இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையென்றால் நாடே பற்றி எரியும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

Chief Election Commissioner Gyanesh Kumar.
Chief Election Commissioner Gyanesh Kumar.source:pragativadi.com

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதியான சூர்யகாந்த், "வெறும் ஊடகச் செய்திகளின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படாது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அதில் ஏதேனும் மீறல் இருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்," என்று கூறினார். மேலும் தலைமை நீதிபதி ஒரு விளக்கத்தையும் அளித்தார். “திருத்தப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை, அதை திருத்தியவர் யார் என்று அறிய விரும்புகிறோம்." என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கு தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்படும் சட்ட பாதுகாப்பு, 2023 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 16 ஐ ஆய்வு செய்கிறது. இந்த சட்டப்பிரிவு. பதவியில் உள்ள மற்றும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, உரிமை இயல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கிறது.

இன்றைய விசாரணையின் போது தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், அவரை பதவியில் இருந்து நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com