தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் அகரம் அறக்கட்டளை என்கிற அமைப்பினை ஏற்படுத்தி ஏழை மாணவ மாணவியருக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். அவர் நடித்த ஜெய்பீம் திரைப்படம் பொதுமக்களிடையே நிறைய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது .
நடிகர் சூர்யா சினிமாவை தவிர்த்து சமூகம் சார்ந்த பல நல்ல கருத்துக்களைமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஆர்வம் உடையவர். தற்போது சூர்யா பேசியுள்ள நல்ல கருத்து உடைய வீடியோ சமூகவலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது .
அந்த வீடியோவில் உறுப்பு தானம் பற்றி பேசி உள்ளார் . மக்கள் அனைவரும் உறுப்பு தானம் செய்வதால் பல மக்களின் உயிரை காப்பாற்றலாம் என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு, பல தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது .