தைவான் நிலநடுக்கம்: 7.4 ரிக்டர் அதிர்வுகள், சுனாமி எச்சரிக்கை!

Earthquake
Earthquake

இன்று காலை தைவானின் கிழக்குப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான பெரிய நிலடக்கம் ஏற்பட்டதால் அங்குப் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து தைவான், தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பென்ஸ் ஆகிய பகுதிகளில் சுனாமி வருவதற்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி காலை 7.30 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் புவியியல் ஆய்வு இதனைப்பற்றிய விளக்கத்தை வெளியிட்டது. அதாவது இந்த நிலநடுக்கம் தைவானின் ஹுவாலியன் நகருக்கு அருகே 18 கிமீ தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

இதனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மியோகோஜிமா தீவு உட்பட அருகில் உள்ள தொலைதூர தீவுகளுக்கெல்லாம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானிய தீவுகளுக்கு மூன்று மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அங்கே இருக்கும் நிலப்பகுதிகள், பாலங்கள், வீடுகள், கட்டடங்கள் ஆகியவை அதிர்வதுப் போன்ற வீடியோக்கள் வைரலாகி மக்களைப் பதைப்பதைக்க வைத்திருக்கின்றது. முதலில் தைவான் முழுவதும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு பிங்டுங் கவுண்டியில் இருந்து தைபெயின் வடக்கு வரை மோசமான நடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். தைபெயின் வானிலை ஏஜென்ஸி வெளியிட்ட அறிக்கையில், ஹூவாலியன் அருகே 6.5 கிமீ ரிக்டர் அளவிலான நடுக்கத்தை உள்ளடக்கிய பின்னதிர்வுகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதாவது ஒரு நிலநடுக்கத்திற்குப் பின் ஏற்படும் தொடர் நடுக்கங்கள் கண்டறியப்பட்டன.

அங்கு இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே இதுதான் இரண்டாவதான அதித்தீவிரமான நிலநடுக்கம் என்பதுத் தெரியவந்துள்ளது. 20 கட்டடங்கள் முதற்கட்டமாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பலி எண்ணிக்கைப் பற்றிய செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.

பசிபிக் கடலில் ரிங் ஆஃப் ஃபையர் எனப்படும் நெருப்பு வளையம் உள்ளதால் ஜப்பான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகள் ஆகியவை ஏற்படும். அதேபோல் இந்தப் பகுதியில் செசிமிக் செயல்பாடுகளும் அதிகம் இருப்பதால் நிலநடுக்கம் வருவது வழக்கம்.

இதையும் படியுங்கள்:
லண்டன் நாடாளுமன்ற தேர்தல்: ஆளும்கட்சி படுமோசமான தோல்வியை சந்திக்குமா? சர்வே கூறுவது என்ன?
Earthquake

கடந்த 2011ம் ஆண்டு 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுனாமியும் வந்தது. அந்த நிலநடுக்கத்தையடுத்து சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதேபோல் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜப்பான் மக்களின் செல்போனுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பாதுகாப்பாக இருக்கும்படியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com