தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? யாருக்கெல்லாம் கிடைக்காது..?

கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
crop loan relief, CM Vijay
crop loan relief, CM Vijay
Updated on

தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் குறு விவசாயிகள் மட்டுமே 100% முழு கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள். அதாவது கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால், குறு விவசாயிகளுக்கு முழு 100% தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.60,001 முதல் ரூ.70,000 வரைக்கும் ரூ.30,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றிருந்தால் எவ்வளவு பயிர் கடன் தள்ளுபடி தெரியுமா..?
crop loan relief, CM Vijay

அதிகப்படியாக ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று இருந்தால் ரூ.5,000 தள்ளுபடி செய்யப்படும்.

அதேசமயம் 2.5 முதல் 5 ஏக்கர் நிலம் உள்ள சிறு விவசாயிகள் ரூ.50,000 வரை கடன் வாங்கியிருந்தால், அவர்களுக்கு 50% மட்டுமே தள்ளுபடி (அதாவது ரூ.25,000 வரை மட்டுமே தள்ளுபடி) பொருந்தும். மீதித் தொகையை அவர்கள் செலுத்த வேண்டும்.

அதேபோல் 5 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை சொந்தமாக வைத்துள்ள பெரு விவசாயிகளுக்கு கடன் தலா ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 ஹெக்டேர்-க்கு குறைவான நிலத்தில் விவசாயம்(குறு விவசாயிகள்) செய்வோர், 1 - 2 ஹெக்டேர்-க்கு குறைவான நிலத்தில் விவசாயம் (சிறு விவசாயிகள்)செய்வோருக்கு இந்த தள்ளுபடி எதிர்வரும் சாகுபடி பருவத்தில் மீண்டும் கடன் பெற உதவியாக இருக்கும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தக் கடன் தள்ளுபடித் தொகையை வழங்குவதற்கான காலக்கெடுவையோ அல்லது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையோ மாநில அரசு உடனடியாகத் தெளிவுபடுத்தவில்லை.

இதற்கிடையே இந்த அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ (SBI), இந்தியன் வங்கி போன்ற பொதுத்துறை அல்லது தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வணிக வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு இந்தத் தள்ளுபடி சலுகை பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் விவசாய நிலம் வைத்திருந்தாலும், பயிர்க்கடன் அல்லாமல், டிராக்டர் வாங்குவதற்கோ, கிணறு வெட்டுவதற்கோ அல்லது இதர விவசாய உள்கட்டமைப்புக்காகவோ கடன் பெற்றவர்களுக்கு இந்தத் தள்ளுபடி செல்லுபடியாகாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி, நிதி சுமையை காரணம் காட்டி, தமிழக முதலமைச்சரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், உழவர்களுக்கு இது பயனளிக்காது, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தவெக தேர்தல் வாக்குறுதியாக சிறுகுறு விவசாயிகளுக்கு 100% சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 50% சதவீதமும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன் மீது நம்பிக்கை வைத்து விவசாயிகள் அவருக்கு வாக்களித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை மத்திய அரசு தடுத்து விட்டதால் எங்களால் அறிவிக்க இயலாது என்று கைவிரித்ததால் திமுகவுக்கு எதிராக தவெகவிற்கு ஆதரவாக விவசாயிகள் வாக்களித்துள்ளனர். ஆனால் நிதி சுமையை காரணம் காட்டி, விவசாயிகளுக்கு பயனளிக்காத கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
தவெக-வின் 'பட்ஜெட்' சவால்! தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விஜய்க்கு ரூ.42,000 கோடி தேவை..!!
crop loan relief, CM Vijay

மேலும் இந்தத் கடன் தள்ளுபடி திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மற்றவர்களுக்கு இது பொருந்தாது என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com