

தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரம்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிக்கு பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு வரும் 22-ம்தேதி கடைசி நாள் என்பதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனம் :
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் வேலை
வகை : தமிழ்நாடு அரசு வேலை
மொத்த பணியிடங்கள் : 11
பூவிருந்தவல்லி : 7
வில்லிவாக்கம் : 3
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் : 1
கடைசி தேதி : 22.12.2025
விண்ணப்பத்தாரர் தகுதி மற்றும் வயது வரம்பு:
10-ம் வகுப்பு தேர்ச்சி
பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயது மிகாதவராகவும் இருக்க வேண்டும். (25 சதவீத இட ஒதுக்கீடு)
மாற்றுத்திறாளிகளும் விண்ணப்பிக்கலாம். உரிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர் குடியிருக்கும் இடத்திற்கும் விண்ணப்பிக்கும் மையத்திற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
தொகுப்பூதியமாக மாதம் ரூ.3,000 வழங்கப்படும். ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு கால முறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
Tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றின் நகலையும் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வரும் டிசம்பர் 22-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.