குமரி அனந்தனுக்கு வீடு வழங்கியது தமிழக அரசு!

Tamilnadu Government
Tamilnadu Government
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  -இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தமிழகத் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

அவர் தான் வசிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று, சென்னை அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை குமரி அனந்தனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com