ஊருக்கு போறீங்களா..? வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,475 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

Special Bus
Special Bus
Updated on

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளவும் ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,475 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து இந்தச் சிறப்புப் பேருந்துகள் தங்கு தடையின்றி இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல், எவ்வித சிரமமும் இன்றித் தங்களது பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதி விடுமுறைப் பயணங்களுக்கான முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எனவே, வார இறுதியில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், தங்களது இருக்கைகளை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் உடனடியாகத் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறப்பு பேருந்துகள்
சிறப்பு பேருந்துகள்

விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு பயணிகள் அதிக அளவில் செல்வது வழக்கம். இதையடுத்து முக்கிய பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரிக்காமல் இருக்கவும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் சேவைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளையும் இயக்கத் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 410 பஸ்களும், 4-ந் தேதி (சனிக்கிழமை) 290 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3-ந் தேதி வெள்ளிக்கிழமை 55 பஸ்களும், 4-ந் தேதி சனிக்கிழமை 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 3 மற்றும் 4-ந் தேதிகளில் 20 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 445 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று நாள்களில் 1,475 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்து, திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளுமாறு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் வார விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குத் திரும்புவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகப் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து ஜூலை 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் 445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி தங்களின் பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஏழைகளுக்கு முற்றிலும் இலவசம்!₹30 கோடியில் திறக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் ‘ஹோஸ்பிஸ்’ வளாகம்!
Special Bus
logo
Kalki Online
kalkionline.com