தமிழக ஆளுநர் டெல்லிக்கு அவசர பயணம்!

Governor RN Ravi
Governor RN Ravi
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

-இதுகுறித்து கவர்னர் மாளிகை வட்டராத்தில் தெரிவிக்கப் பட்டதாவது;

தமிழகத்தில் நிலவி வரக்கூடிய பல்வேறு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆளுநர் ஆர்.என். ரவி பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக கோவை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் பேச இருக்கிறார்.

 -இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com