
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை எழுந்து வரும் நிலையில், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும், 881 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த அனைத்து முழு விவரங்களையும் www.tngasa.org என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
* தகுதி வாய்ந்தவர்கள் www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் 08.10.2025 ஆகும்.
* 881 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்த உள்ளனர்.
* விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* ஜூலை 21ம்தேதி செய்தி அறிவிப்பின்படி, ஏற்கனவே கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் தற்போது விண்ணப்பிக்கும் போது தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறலாம்.
* கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கெளரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.