இனி இல்லை அரசியல் சிபாரிசு..! 56 ஆண்டுகளுக்குப் பின் வந்த அரசின் அதிரடி அறிவிப்பு..!

TNPSC
tnpsc
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

தமிழ்நாட்டில் முதன்முறையாக DIPR-ல் பணி குறித்த அரசு அறிவிப்பு வெளிவந்துள்ளது. புகைப்பட கலைஞர்கள் உட்பட 461 பணியிடங்களுக்கு ஜூன் 25 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

போட்டோகிராபர் பணியிடங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியான பரிந்துரைகளின் பெயரில் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் 56 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் (DIPR), கடந்த 56 ஆண்டுகளாக அரசியல் பரிந்துரைகள் மூலம் நிரப்பப்பட்டு வந்த புகைப்பட கலைஞர் பணியிடங்களுக்கு, தற்போது (TNPSC)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை உட்பட மொத்தம் 461 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதில் DIPR துறைக்கு மட்டும் 23 ஜூனியர் புகைப்படக்காரர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 1970 முதல் அரசியல் தொடர்புகள் மற்றும் பரிந்துரைகள் மூலம் மட்டுமே நிரப்பப்பட்டு வந்த 'ஜூனியர் புகைப்படக்காரர்' பணியிடங்கள், முதல் முறையாக வெளிப்படையான போட்டித் தேர்வு (TNPSC) மூலம் நிரப்பப்பட உள்ளன. இதனால் தகுதி வாய்ந்த திறமைசாலிகள் பணி வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியாக தேர்வர்கள் புகைப்படம் எடுத்தல் தொடர்பான (போட்டோகிராபி மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன்) முறையான பட்டயப் படிப்பு (Diploma) அல்லது பட்டப்படிப்பு ( டிகிரி)முடித்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் துறை சார்ந்த எழுத்துத் தேர்வு நடைபெற்று அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் நேர்காணல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதியானவர்கள் இது தொடர்பான முழுமையான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்களை TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (TNPSC Online Services) சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் இது போன்ற புதிய அறிவிப்புகளை அறிய TNPSC Notifications பக்கத்தைத் தொடர்ந்து பார்வையிடலாம்.

இது வரை இல்லாத சிறப்பாக முறையான தேர்வுகள் மூலம் நேரடி நியமனங்கள் அறிவிக்கப்பட்டு முதன்முறையாக செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) போன்ற துறைகளில் காலியாக உள்ள இளநிலை புகைப்படக் கலைஞர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு நடைபெறுவதை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர். புதிய அரசின் இந்த சிறப்புமிக்க புதிய வேலைவாய்ப்பு மாற்றத்தின் முழுமையான பலன்களை இதே போன்று சிபாரிசு இன்றி மற்ற துறையினரும் விரைவில் பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சனாதனம் வேண்டாம்னா முதல்ல பெத்தவங்களை துரத்தணும் - நடிகர் அர்ஜுன் பரபரப்பு பேட்டி!
TNPSC
logo
Kalki Online
kalkionline.com