புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தரும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

மிழ்நாடு சட்டசபை, துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடத்த கடந்த வியாழக்கிழமையன்று கூடியது. அதைத் தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.

இதில் இன்று கலந்துகொண்டு பேசிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாகப் பயன்பெறும் வகையில் 2500 சதுர அடி மனையில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு இனி அரசின் கட்டட அனுமதி பெற தேவையில்லை என ஏற்கெனவே முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் அவர்களுக்கு சுயச்சான்று மூலம் அனுமதி வழங்கப்படும். கட்டட அனுமதி தேவையில்லை என்றாலும், அவர்கள் கட்டட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

அதுபோல் 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டடங்கள் 8 சமையலறைக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் அதற்காக விதிகளை மீறக் கூடாது. கட்டட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

3500 சதுர அளவிலான கட்டடங்கள் கட்ட அனுமதி தேவையில்லை என்ற அறிவிப்பின்படி நில உரிமையாளர்கள் தரைதளம் அல்லது தரைதளத்துடன் முதல் தளம் வரையிலான கட்டடங்களுக்கு, உடனடி பதிவு அடிப்படையில், கட்டட அனுமதி பெற புதிய வசதி ஏற்படுத்தப்படும். இதன் வாயிலாக கட்டப்படும் கட்டடங்களுக்கு, கட்டட அனுமதி, பணி நிறைவு சான்று தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
நாளுக்கு நாள் சவுதியில் கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்… இப்படியே போனா..??
அமைச்சர் முத்துசாமி

குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி, கட்டட விதிகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் விண்ணப்பங்கள், வரைபடங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், அதிகாரிகளின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், மக்கள் வீடு கட்டும் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால், சாதாரண வீடு கட்டுவோர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதால் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி, அந்தத் துறை ரீதியிலான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நகர் ஊரமைப்பு இயக்கம் மற்றும் நகர்புற வளர்ச்சி குழுமங்கள் பொதுமக்களுக்கு எளிதான சேவைகள் வழங்க தொலைநோக்கு செயல்திட்டம் உருவாக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை புவியியல் தகவல் முறையில் கொண்டு மக்களுக்கு தனி இணைய செயலி உருவாக்கப்படும் என்பது போன்ற விஷயங்கள் அந்த அறிவிப்பில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com