நாளுக்கு நாள் சவுதியில் கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்… இப்படியே போனா..??

Saudi Arabia
Saudi Arabia
Published on

காலநிலை மாற்றத்தின் கோர தாண்டவத்தால், சவுதியில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் தற்போது ஹஜ் புனித யாத்திரைக்கு சென்றவர்களில் 900க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக தகவல் வந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ஹஜ், இஸ்லாமியர்களின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர், புனித யாத்திரைக்காக மெக்காவிற்கு வருவார்கள் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அங்கு தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு வந்த ஹஜ் பயணிகளில் 19 பேர், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. வெப்ப அலையின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு மட்டும் சவுதியில் ஏற்பட்ட வெப்ப அலையில் சிக்கி 68 இந்தியர்கள் உட்பட 645 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 323 பேர் எகிப்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 900 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 90 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 17 பேரை காணவில்லை. உயிரிழந்தவர்களில் சிலரின் உடலை சவுதியிலேயே அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஹஜ் புனித யாத்திரையில் 68 இந்தியர்கள் உயிரிழப்பு… வெளியான தகவலால் மக்கள் பீதி!
Saudi Arabia

கடந்த சில 10 ஆண்டுகளில் சவுதியில் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2014ம் ஜூன் மாதத்தில் பதிவான வெயிலை விட, இந்த ஆண்டு 0.4 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது பயணிகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய தங்கும் இடங்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com