பள்ளி மாணவர்களே ரெடியா..? அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..!

SCHOOL EXAM
SCHOOL EXAM
Published on

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையும், பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.

6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை

  • டிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வு

  • டிசம்பர் 16- ஆங்கிலம்

  • டிசம்பர் 17- விருப்ப மொழி தேர்வு

  • டிசம்பர் 18 கணிதம்

  • டிசம்பர் 19- உடற்கல்வி தேர்வு

  • டிசம்பர் 22- அறிவியல்

  • டிசம்பர் 23- சமூக அறிவியல்

10-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை

  • டிசம்பர் 10- தமிழ்மொழி

  • டிசம்பர் 12- ஆங்கிலம்

  • டிசம்பர் 15- கணிதம்

  • டிசம்பர் 18- அறிவியல்

  • டிசம்பர் 22- சமூக அறிவியல்

  • டிசம்பர் 23 விருப்ப மொழி தேர்வு

+1 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை

  • டிசம்பர் 10- தமிழ்

  • டிசம்பர் 12 ஆங்கிலம்

  • டிசம்பர் 15- இயற்பியல், பொருளாதாரம்

  • டிசம்பர் 17- கணிதம், விலங்கியல், வர்த்தகம்

  • டிசம்பர் 19- வேதியியல், கணக்கு பதிவியல்

  • டிசம்பர் 22- கணினி அறிவியல்

  • டிசம்பர் 23- உயிரியல், வரலாறு, தாவரவியல்

12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை

  • டிசம்பர் 10- தமிழ்மொழி தேர்வு

  • டிசம்பர் 12- ஆங்கிலம்

  • டிசம்பர் 15- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், விவசாய அறிவியல்

  • டிசம்பர் 17- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

  • டிசம்பர் 19- இயற்பியல், பொருளாதாரம்

  • டிசம்பர் 22- உயிரியல், தாவரவியல், வரலாறு

  • டிசம்பர் 23- கணினி அறிவியல்"

இதையும் படியுங்கள்:
SIR படிவத்தில் தவறாக எழுதியதை திருத்த முடியுமா? வெளியான முக்கிய அப்டேட்..!
SCHOOL EXAM

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com